மெல்லவே வீசிடும் மேலைத் தென்றல் காற்றில்

மெல்லவே வீசிடும் மேலைத்தென் றல்காற்றில்
நில்லாமல் நீயும் நடந்துசெல் வாயானால்
என்ன பயன்இவ் விளவேனில் காலத்து
மென்மாலைக் கும்நிலவுக் கும்

மெல்லவே வீசிடும் மேலைத்தென் றல்காற்றில்
நில்லாமல் நீயும் நடந்திடின்-- சொல்வாய்நீ
என்ன பயன்இவ் விளவேனில் காலத்து
மென்மாலைக் கும்நிலவுக் கும்

---இரு விகற்ப இன்னிசை நேரிசை வெண்பாக்கள்
மோனைகளும் அழகு சேர்ப்பதை கவனிக்கவும்

எழுதியவர் : கவின் சாரலன் (25-Oct-22, 9:24 pm)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 54

மேலே