அவள் கண்களின் அழகு

ஒளிரும் செந்தாமரைப் பூ முகத்தாள்
தன் அழகு முகத்தை தடாகத்துப்
பளிங்கு நீரில் பார்க்க அவள்
முக பிம்பத்தில் கயல் விழியாள்
கண்ணின் கருமணிகள் இரண்டும்
தாமரை மீது மொய்க்கும் கருவண்டென
காண தடாகத்து தாமரை மீது இருந்த
வண்டிரண்டு இவள் முகபிம்பத்தை
தாமரையே என எண்ணி அதை நாட
அது வெறும் பிம்பமே என அறியாது
போக்கிடம் தெரியாது திணறியதே காண்

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (25-Oct-22, 8:30 pm)
Tanglish : aval kangalin alagu
பார்வை : 302

மேலே