காதல் வலி- 90

அழகோவியம்

இவள்
நிச்சயம்
ஒரு கன்னிக்குப்
பிறந்தவள் அல்ல
கனிக்கு பிறந்தவள்
அல்லது
கணினிக்கு பிறந்தவள்
பல இளைஞர்களின்
எதிர்காலத்தை கணிக்கப்
பிறந்தவள்

இவள்
வெள்ளை மல்லிகையை அல்ல வெள்ளை மாளிகையைத் தன் தலையில் சூடுகின்றவள்

கவிஞர்கள்
அனைவரும் நிலவைப் பார்த்து வியந்து கொண்டிருக்க
அந்த நிலவு மட்டும்
இவள் நிழலைப் பார்த்து
அயர்ந்து கொண்டிருந்தது

அனைவரின்
உடம்பிலும் இரத்தம்
ஓடிக்கொண்டிருக்க
மாறாய்
இவள் உடலில் மட்டும்
ரதம் ஓடுகிறது..

புத்தகத்தில் உள்ள மயிலிறகை பார்த்து குட்டி போட காத்துக் கொண்டிருந்தாள்
பிரதமர் இவளை தோகையில்லா
தேசியப்பறவையாக அறிவிக்கக் காத்துக் கொண்டிருப்பது அறியாமல்

இவளைப் பார்த்த அனைவரும் கவிஞர் ஆனார்கள்
இவள் பார்த்த ஒருவன் தான்
கணவன் ஆனான்

இவள் அமமுக வின் தலைவி
அமமுக என்றால்
அழகிய மங்கைகள் முன்னேற்ற கழகம்.

தாஜ்மகால் ஷாஜகான்
கட்டியது.
இவளோ
நான் கட்ட நினைக்கும்
தாஜ்மகால்.

எழுதியவர் : Kumar (15-Jun-21, 10:47 pm)
சேர்த்தது : புதுவைக் குமார்
பார்வை : 75

மேலே