கற்பனையா

ஏனடி
எனக்குப் பிடித்த
கிளிப்பச்சை நிறத்தோடு,
பிடிக்காத சிவப்பு சேர்த்து சேலை உடுத்தினாய்.....?
உருத்தும் என் கண்கள்
உன் ஆடையைத் திருத்தும் நோக்கில் பின் தொடர்ந்து,
இப்போது வரைத் திரிகிறது
உன் பின்னால்.....
குறுகுறுவெனப் பார்த்து
உன் பின்னலின் நீளத்தில்
என் உள்ளத்தைப் பின்னிக்கொண்டு
உன் தோழியைத் தொட்டு நீ தள்ளும்போது
விழுகிறது என் மனம்
உன் முக பாவத்தில்......
வரிசைப் பற்கள்,
வகிடெடுத்த தலை,
வசப்படுத்தும் கண்கள்
என வலைவிரிக்கத் தான் இப்படி வந்தாயோ...!
தலைகுனிந்து நீ நடக்க
நானும் குனிந்துப் பார்த்தேன்...
என் விருப்பச் சிவப்புப் புடவையில்
நீ,என்னைப் பார்த்து சிவந்ததை....
என்னைப் போலவே நீயும்
வசைபாட வந்து
வசப்பட்டுப் போனதென்ன...?
தொடரும் நம் காதல்
நீயே வந்து சொல் என
காணாமல் போனாயே......
விழித்துப் பார்த்தால்
.....இத்தனையும் கற்பனையா....

எழுதியவர் : மீனாட்சி (10-Jan-17, 12:38 pm)
பார்வை : 114

மேலே