கனவு + கற்பனை = காதல் - ஒருவிகற்ப இன்னிசை வெண்பா
கனவுடன் கற்பனையும் காசினியில் சேர்ந்தால்
நனவாகும் காதலும் நாடிவரும் நாளும்
மனமெங்கு மின்பமுமாய் மாசற்ற அன்பு
தினந்தினமும் பொங்கிடுமாம் தீர்வு .
ஆக்கம் :- பைந்தமிழ்ப் பாமணி . சரஸ்வதி பாஸ்கரன்