வெளியேறு வெளியேறு பீட்டா அமைப்பே வெளியேறு

வெளியேறு வெளியேறு 'பீட்டா அமைப்பே' வெளியேறு !
வெளியேறு வெளியேறு இந்தியாவைவிட்டு வெளியேறு !!

கிடா கிடாவெட்டி சாப்பிடுவார்கள் இவர்கள்
மசாலாவுடன் கோழிக்கறியினை தள்ளுவார்கள் உள்ளே
பசுவின் கறியினையும் உண்ணுவார்கள் சேர்ந்தங்கே
மிருகவதை தடுக்கும் 'பீட்டா' இவர்கள்பெயர் !

களம் பலக்கண்டது எங்களது தமிழ்நாடு
காளையினையடக்கி வீரம் (செ)சொறிந்த தமிழ்நாடு
கோழையர்கள் என்று நினைத்தார்களா தமிழ்மக்களை
வீழவில்லை யென்றும் தன்மான தமிழர்கள் !

வெள்ளையருக்கு எதிராக விடுதலை வேட்கையை
விதைத்தது முதன்முதலில் தமிழினம் தான்
தடைச்செய்த தமிழர் பாரம்பரிய விளையாட்டினை
கண்டு களிப்புறுவோம் 'பீட்டாவினை' வெளியேற்றி !

சொந்தமென காளையினை மதித்தங்கு வீட்டினிலே
பந்தமதை அதனிடையே காட்டி வளர்த்தோம்
பெருகியதே தமிழ் மண்ணில் காளையினம்
போற்றிடவே மனமில்லை 'பீட்டாவிற்கு' தமிழகத்தை !

காளையருக்கு வயதுவந்தால் தேடுவார்கள் மணப்பெண்ணினை
காளைகளுக்கும் தேடுவார்கள் இவ்வண்ணமே துணையிங்கு
காளையினை அடக்குவதால் தமிழனுக்கு அழகு
காளையினம் பெருகுவதால் தமிழ்மண்ணிற்கு அழகு !

தடையினைக் கேட்க 'பீட்டாவிற்கு' அதிகாரமில்லை
தடையினை உடைத்தெறிந்த தமிழனுக்கு பெருமையிங்கே
ஒன்றுதிரண்ட தமிழனின் புகழும் ஆங்கே
ஓங்கி வளர்ந்திடாதா இவ்வுலகில் என்றென்றும் !

கோன்முடி - தெய்வசிகாமணி

எழுதியவர் : தெய்வசிகாமணி (22-Jan-17, 11:42 pm)
பார்வை : 158

மேலே