வெயிலின் அருமை நிழலில் தெரியும்
வீட்டு தோட்டத்தில் முளைக்கும் விதைக்கும்,
நேற்றுப் பிறந்த என் தம்பிக்கும்,
தோழியின் தோல் நோய்க்கும்,
உற்ற நண்பன் பகலவன்...
கொத்திக் கொல்லும் கொசுவுக்கு எதிரி.
பகலில் இல்லாத விளக்கிற்கு இவன் தான் திரி...
பச்சிளங்குழந்தையின் மஞ்சள் காமாலைக்கு மரண சங்கு இவன்.
நோயெதிர்ப்பு சக்தி தர இவனுக்கு பங்கு எவன்?
மூளை முடக்கத்தையே முடக்கிடுவான்; கால்சியத்தை கிரகித்திடுவான்.
கண்ணுக்கு ஆற்றல் தருவான்
மின்னுக்கு சக்தி தருவான்- இவன்
மண்ணுக்கு வளம் தருவான்
தண்ணீருக்கு களம் தருவான்
இவனில்லா அவனியிலே-வாழ
எவனாலும் இயலாது
வெயில் என்றால் வேதனையா?
நிழலில் மட்டுமே நின்று பார்...
வெயிலின் அருமை நிழலில் தெரியும்!