தேடியே தொலைகிறேன்

நேற்று
கடைத்தெருவை
இருசக்கர வாகனத்தில்
கடந்து சென்ற போது
எதிர்பாரா தருணத்தில்
சரியாய் பார்க்கத் தவறிய
அந்த பெண்ணின் முகம்
கண் முன்னே வந்து வந்து சென்று
என் காட்சிகளின்
கவனத்தை திசை திருப்பி
அந்த முகம் எந்த முகம் என்று
என் சொந்த முகம் தொலைந்து
திசை தெரியாமல் தேடித்திரிகிறேன்
தெரியாத அந்த தேவதையை ...

எழுதியவர் : வருண் மகிழன் (9-May-19, 3:49 pm)
சேர்த்தது : வருண் மகிழன்
பார்வை : 1653

மேலே