சமூகத்திற்கு ஒரு மனு🌴

"ஒவ்வொரு மனசாட்ச்சியின் ஆணிவேரில்
ஆழ்ந்துபோய் குரட்டைவிட்டு
தூங்குகிறது நியாயமான நீதிகள்.........."
"அரசியல் சாக்கடையிலும்
அதிகாரக் கோட்டையிலும்
பணத்தின் மேனியிலும்
ஏழையின் உறிஞ்லிலும்....
கால் மேல் கால் போட்டு
நிமிர்ந்து நிற்கிறது
அநியாயமான அநீதிகள்...."
"ஆதியில் தொடங்கி அந்தம் வரை
உலகில் அநீதிகள் பயணிக்கிறது
அதன் வரவேற்போ அமோகம்..."
"நியாயமான நீதிகள்
மனதில் நீந்தி நீந்தி ஒரு வழியாக
உலகை எட்டிப்பார்த்தாளும்
அநீதியின் சாட்டையால் அடிக்கப்பட்டு துறத்தப்படுகிறது...."
"நீதிகள் கண்ணீறோடு சேர்ந்து அழுகிறது
அநீதிகள் ஊழலின் நிழலோடு எழுகிறது....
வெறுப்பு எம்மை சூழ்ந்து வேடிக்கை பார்க்க... வாழ்வின் அர்த்தம் தேடி கூனி குறுகி நிற்கிறது உடல்...."

எழுதியவர் : இஷான் (10-May-19, 2:41 pm)
சேர்த்தது : இஷான்
பார்வை : 104

மேலே