படிமங்கள்

என் நினைவுகளின்
அடுக்குகளில் படிந்துள்ள
பழைய துயரங்களின் வடுக்களை
நிகழ்கால
நிகழ்வுகளின் நினைவுகள்
போராடி
ஜீவிக்க முடியாமல்
தினம் தினம்
தோற்றுப்போகிறது ...
மூளை சலவை
செய்ய முடியும் நம்மால்
நினைவுகளை
சலவை
செய்ய முடியவில்லை ஏனோ?

எழுதியவர் : வருண் மகிழன் (10-May-19, 3:40 pm)
சேர்த்தது : வருண் மகிழன்
Tanglish : padimangal
பார்வை : 54

மேலே