முதல் முத்தம்

அன்று பள்ளி விடுமுறை நாள்
நான் என் அத்தையின் வீட்டின்
பின்புறத்தில் மாமரத்தில் தொங்கிய
மாங்காயைக் கொய்து பதம்பார்க்க
வந்து சேர்ந்தாள் அவளும் என்அத்தைமகள்
சின்னவள் அவள் பாவாடையில் இருந்த சிறுமி
எனக்கொன்று பறித்து தருவாயா மாங்காய்
மாமா என்று கேட்டாள் அக்கணமே நான்
பறித்து தர பறித்த மாங்காயை வெடுக்கென்று
கடித்தாள் ருசித்தாள் எனக்கதில் ஓர்தூண்டும்
தந்தாள் ஆசைப்பொங்க, பின் என் கையைப்பற்றி
தட்டாமாலை ஆடலாம் வா மாமா என்றாள்
அவள் ஆட்டி வைத்தால் நானும் ஆடினேன் ;
எங்களுக்குள் உறவோடு உயர் நட்பும்
வந்து சேர்ந்தது உள்ளத்தால் அன்றே எங்களைப்
பிணைத்து…. இன்று அவள் என் அத்தைமகள்
பருவமங்கை என்னைப்பார்த்து சிரித்தாள்
சிரிப்பில் அன்றிருந்த அதே நட்பும் அதில்
இப்போது புதிய ஓர் நேசம் கூடி இருப்பதும் கண்டேன்
இப்போது அவள் என் கையைப்பற்றி இழுத்து
சென்றாள், தட்டாமாலை ஆட அல்ல
நதியோரம் உலாவிவர காதல் மொழி பேசி வர
நட்பும் நேசமும் காதலாய் மலர்ந்தது இப்போது
அன்று அப்பருவத்தில் அவள் தந்தஹார் சுகம்
இளமையில் நட்பு இன்று அவள் தருவது
நட்புடன் ஓர் ஆசை , பருவ சுகம்
அவள் அறிவாள் என்னவள் அவளுக்கு நான்
வாழ்க்கை துணைவரென்று வீட்டு பெரியோர் முடிவு
என்றறிந்தே தன காதலை எனக்களித்தாள்
காணிக்கையாய் முதல் முத்தம் தந்து /

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன் -வாசு� (14-Mar-19, 12:16 pm)
Tanglish : muthal mutham
பார்வை : 320

மேலே