பெண்ணியம்- பெண் விழிப்புணர்ச்சி

அன்பு காட்டுவோர்க்கு அன்னையாய் இரு
ஆனால் அளவுக்கு அதிகமான அன்பும் ஆபத்தானதே....!!

அன்றோ பாரதியார்,பெரியார் போன்ற புரட்சியாளர்கள் பெண்ணின் -
திறமைகள் வெளிவரவே முயன்றனர் !
இன்றோ சில ஆண்கள் உன் அங்கங்களை வெளியிடவே அலைகின்றனர் !
அன்பு காட்டி ஆடை பறிப்பவனும் உண்டு இவ்வுலகில்!
உறவாடி கெடுபவர்களும் உண்டு இவ்வுலகில்!
நம்பிக்கை தந்து நாசம் செய்பவர்களும் உண்டு!
அக்கயவர்களுக்கு கண்ணால் எரிக்கும் கண்ணகியாக இரு!
தவறாகத் துன்புறுத்தும் கயவர்களுக்குக் காளியாய் இரு!

காம-கயவர்களுக்கு காலனாய் இரு.......!!
பெண்ணே உடலை மறைக்கவே ஆடை
ஆபத்தை விளைவிக்கும் அளவிற்கு ஆடைக் குறைவு ஏன்?
பார்க்கும் அனைத்து கண்களும் நல்ல கண்கள் அள்ளவே!
கண்ணன் வந்து சேலைக் கொடுக்கும் காலமில்லை இது !
உன்னைக் காக்கும் ஆயுதம் உனக்குள்ளே !
அதனால் உன் கையை கொண்டு கயவன் கண்ணிரண்டையும் கொய்து விடு...!!

பாரதிக்கு மீசை துடித்ததால், வீட்டை ஆண்ட பெண்கள் நாட்டை ஆளமுடிந்தது
ஒவ்வொரு தந்தையும் நினைத்தால் அறையில் இருக்கும் பெண்களின் அறிவும் அரங்கேறும்...!!
ஆடவர்களுக்குப் பயந்து பெண்பிள்ளையை அறைக்குள்ளேயே வளர்த்தல் மடமையல்லவோ !
மனவலிமையும்,தன்னை தானே பாதுகாத்துக் கொள்ளும் தற்காப்புக்கலையும் கற்றுக் கொடுங்கள்!
தடைகளைத் தாண்டி வந்தால்தான் தடம் பதிக்க முடியும்...!!
இன்றைய மாற்றமே நாளைய முன்னேற்றம் !
பெண்களை மதிப்போம் பெண்மை காப்போம்....!!!

-கவி கயல்

எழுதியவர் : கயல் (14-Mar-19, 10:51 am)
சேர்த்தது : கயல்
பார்வை : 1024

மேலே