முதியோர் இல்லம்
வந்து பார்க்காத
வனப்பகுதி
திருமணநாட்கள்
பிறந்தநாட்கள்
உறவுகள்
மறைந்தநாட்களில்
தீவனங்களை
கொட்டிவிட்டுப்போகும்
மாட்டுக்கொட்டகை
கருப்பை குடிலை
கருவில் உதித்தவைகள்
அவ்வப்போது
காணவரும்
கண்காட்சி நிலையம்
உத்திரவுரலை
உச்சந்தலைமுதல்
தூரத்திலிருந்தே
முகர்ந்துப்பார்க்கும்
முதியோர்கள்