அழகான காதல் கவிதை
❣️💟❣️💟❣️💟❣️💟❣️💟❣️
*பாடலாய்*
*ஒரு காதல்*
*கவிதை*
படைப்பு *கவிதை ரசிகன்*
குமரேசன்
❣️💟❣️💟❣️💟❣️💟❣️💟❣️
உன்னை
பார்த்த நாள் முதலாய்
என்னை காணவில்லையடி....
உன்னை நினைத்த
நாள் முதலாய்
எந்த நினைவும்
தோன்றலையே....
இரவும் பகலும்
எனக்கு ஒன்றாகிப் போனதே !
பசியும் தாகமும் கூட
எனக்கு இல்லாமல் போனதே!
காரணம் இல்லாமல்
சிரிக்கிறேன்....
கண்டதை எல்லாம்
ரசிக்கிறேன்....
தனிமையை நானும்
நேசிக்கிறேன்.....
கவிதையை தினமும்
வாசிக்கிறேன்.....
இரவுக்காக காத்திருக்கிறேன்
நீ நிலவாய் வருவாய் என்று
காலைக்காக விழித்திருக்கிறேன்
நீ மலராய் மலர்வாய் என்று
பார்ப்பதிலும்
சுகம் உண்டு என்பதை
உன்னை பார்க்கும் போது
உணர்ந்தேன்.....
அலைவதிலும்
ஆனந்தம் உண்டென்று
உனக்காக
அலைந்த போது அறிந்தேன்...
இழப்பதிலும்
இன்பம் உண்டென்று
உன்னிடம் இதயத்தை
இழந்த போது கண்டேன்....
காதலை சொல்ல
கடிதம் எழுதினேன்
கணக்கு போட்டதில்
கடிதம் நூறு ஆனதே...... !
காதலை இன்னும் சொல்லவில்லையே !
இது எத்தனை நாள் தொடருமோ?
என்றுதான் முடியுமோ?
உன்னை பார்த்த
நாள் முதலாய்
என்னை காணவில்லையே...!
உன்னை நினைத்த
நாள் முதலாய்
எந்த நினைவும் தோன்றலையே...!
*கவிதை ரசிகன் குமரேசன்*
❣️💟❣️💟❣️💟❣️💟❣️💟❣️