மனைவி

காலையிலே குளித்திடுவாள்
கை மஞ்சள் பூசி - அவள்
கடவுளுக்கே வெப்பம் என
போட்டு வைப்பாள் ஏ சி

வீட்டிலுள்ள அனைவரையும்
விரட்டிடுவாள் அன்பில் - மிக
தாகம் என்று சொல்லிடுமுன் நீர்
தந்திடுவாள் செம்பில்

விரல் பிடித்து நகம் கடித்து
சொல்லிடுவாள் கதையை - நற்
செடிகளையே தேர்ந்தெடுத்து
விதைத்திடுவாள் விதையை

காலையிலே கீரைக்கெல்லாம்
ஊற்றிடுவாள் தண்ணீர் - செடி
வாடுகையில் குழந்தைப் போலே
வடித்திடுவாள் கண்ணீர்

குழந்தை ஏதும் தவறு செய்தால்
கொட்டிடுவாள் தலையை - அவள்
குடும்பத்திற்கோர் தீங்கு என்றால்
இழுத்திடுவாள் மலையை

மிளகு பொடி காரப்பொடி
வருத்திடுவாள் தினமும் - அவள்
சமைக்கையிலே வந்திடுமே
காய்கறிக்கும் மணமும்

சின்ன சின்ன வேலையெல்லாம்
செய்திடுவாள் துணைவி - அவள்
இந்திரனே ஆசைப்பட்டு
கிடைக்காத என் மனைவி

எழுதியவர் : கண்ணன் செல்வராஜ் (20-Apr-24, 1:48 pm)
சேர்த்தது : Kannan selvaraj
Tanglish : manaivi
பார்வை : 89

மேலே