கோடிட்ட கவிதை

ஒரு நாள்...
...கண்டேன்
...கொண்டேன்
...புரண்டேன்
...விழித்தேன்
...உணர்ந்தேன்
...உருகினேன்
...தீர்மானித்தேன்
...வரைந்தேன்
...துணிந்தேன்
...சந்தித்தேன்
...சமர்ப்பித்தேன்

...காத்திருந்தேன்
...கலங்கியிருந்தேன்
...தவித்தேன்
...துடித்தேன்
...துவண்டேன்
...ஏங்கினேன்
...எதிர்பார்த்தேன்

...கேட்டேன்
...வியந்தேன்
...மகிழ்ந்தேன்
...குதித்தேன்
...கொண்டாடினேன்
...மறந்தேன்
...பறந்தேன்
...சேர்ந்தேன்
...பற்றினேன்
...சுற்றினேன்
...கலந்தேன்
...கழித்தேன்
அந்த நாள்...
...தவிர்த்தாள்
...தயங்கினாள்
...மறைத்தாள்
...மறுத்தாள்
...சிரித்தாள்
...சித்தரித்தாள்
...நீட்டினாள்
...காட்டினாள்
...அழுதாள்
...அழைத்தாள்

...அதிர்ந்தேன்
...ஆத்திரப்பட்டேன்
...கோபப்பட்டேன்
...கூச்சலிட்டேன்
...கொந்தளித்தேன்
...அறிந்தேன்
...அடங்கினேன்
...அமைதியானேன்
...வாங்கினேன்
...வாழ்த்தினேன்

...பிரிந்தேன்
...வருந்தினேன்
...கலங்கினேன்
...காயப்பட்டேன்
...வளர்த்தேன்
...திரிந்தேன்
...குடித்தேன்
...விழுந்தேன்
...வெறுத்தேன்
...முடிவெடுத்தேன்
...முயன்றேன்
...தோற்றேன்

...புரிந்தேன்
...உணர்ந்தேன்
...உறுதியானேன்
...மழித்தேன்
...மாறினேன்

இன்னொரு நாள்...
...கண்டேன்
...கொண்டேன்......
இது தொடர்கதை

எழுதியவர் : வி,வி,குமார் (18-Aug-12, 5:27 pm)
பார்வை : 272

மேலே