சிந்தையெழில் வெளியில் துள்ளும் எந்தன் மானே
அந்தமானும் உந்தன் அழகில் மயங்கிடும்
அந்தி நிலவுமுன் ஆசைமுகத் தைப்பார்க்கும்
சிந்தை வெளியினில் துள்ளும்எந் தன்மானே
சந்திப்போ மாநிலவின் கீழ்
அந்தமானும் உந்தன் அழகினிலே மயங்கிடுமே
அந்திநேர நிலவும் ஆசைமுகத் தைப்பார்க்கும்
சிந்தையெழில் வெளியில் துள்ளும்எந் தன்மானே
சந்திப்போ மாநாம் சந்திரன்வந் திடும்பொழுதில்
அந்தமானும் உனதுசிலை அழகினிலே மயங்கிடுமே
அந்திநேர நிலவுமுமே ஆசைமுகத் தினைப்பார்க்கும்
சிந்தையெழில் வெளியினில் துள்ளுகின்ற எனதுமானே
சந்திப்போ மாசொல்நாம் சந்திரன்வந் திடும்பொழுதில்
----முறையே இன்னிசை வெண்பா கலிவிருத்தம்
தரவு கொச்சகக் கலிப்பா