காதலும் கண்ணனும்

கண்ணன வன்குழல் கீதம் சிந்திட
கண்ணெழில் காரிகை காதல் ஏந்தியே
கண்ணயர்ந் தாளவள் கண்ணன் பூமடி
பெண்ணவள் யமுனையள் பார்த்து நாணினள்

---விளம் விளம் மா கூவிளம் வாய்ப்பாடு
எதுகை மோனை அழகுடன் கலிவிருத்தம்

கண்ணெழில் காரிகை --ராதை
பெண்ணவள் யமுனையள்--யமுனா நதி

கண்ணன வன்குழல் கீதத்தைச் சிந்திட
கண்ணெழில் காரிகை காதலை ஏந்தியே
கண்ணயர்ந் தாளவள் கண்ணனின் பூமடி
பெண்யமுனா நாணினள் பார்த்து

-----இன்னிசை வெண்பா

எழுதியவர் : கவின் சாரலன் (24-Nov-23, 10:25 pm)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 89

மேலே