ப்ரியப்பட்ட டேஷ் - 07

ப்ரியப்பட்ட டேஷ் - 07

சூரிய சந்தியைகளில் மஞ்சள்மறைக் கொந்தவெளிக் கீழ்வானம் ஒன்று
முந்தாணையிட்ட புகைக்கோலம் தான்.
நீ வந்தது.

முதல் காணலில் கனவுகள் பிறப்பது
ஆகாயகமனத்தில் பறப்பது என
பிஞ்சுநேசங்களில் திளைத்திருக்கவில்லை

என் ப்ரியங்களுக்கான முதிர்ச்சி என்பது,
என்‌குரல்
இளையதாயொரு புன்னகை
கண்களில் காணும் அமைதி பேரொளி
நெருப்பில் வார்த்தெடுக்கப்பட்ட
இரும்பு
இவற்றைப்போல கனம் நிறைந்தது.

நாளங்களில் உறைந்து கிடக்கும்
இரத்தம்.
இரணங்களின் நடுவில் உருளாமல் கிடக்கும் கட்டி.
காற்றில் கலந்த உன் சினுங்கல் சப்தம்.
செவி அறைகின்றன.

எப்போதும் அழைத்துவிடவேண்டுமாய்
ஒருச் செல்லப் பெயரிட்டு
அடைகாக்கிறேன்

ஆன்மாவின் குரல்
உன் கனவுகளில் ஒலிப்பரப்புவதாக
ஒரு மூட நம்பிக்கை எழுப்பி
என் காலங்கள் விரைந்தோடுகின்றன.

விழி ஓங்கும் உன் வரவிற்கான காத்திருப்பு
உன்னை சஞ்சலப் படுத்தவேண்டாம்.
உன்னைச் சுற்றித் திரியும்
பாவியென நான்
பழியின் கரு சுமக்கிறேன்.

உன் நகர்வுகளின் சுமதலைகளுக்கு
விடையாகிடவா . ?
கருமணி சுழலும் பிறழ்க்கனவுதனில்
என்னென்னவோ மாதிரி
உன் ஏக்கங்களுக்கெல்லாம்
மருந்தாகிடவா. ம் ?

கனவில்
ஒரு அப்சரஸ் சொல்லிச் செல்கிறது
நீ எனக்கானவள் என்று.
ஆணியில் அறையப்பட்ட ஏசுவின்
அழுக்குரலின்
நரிட்சிதான் நேசம் என்னுடையது.
"மெளனித்தொடுங்கி விட்டேன்"
உன்னிடம்
என் ஆசைகளையோ
தவறுகளையோ
திணித்திடாத நேரங்களையே
அதிகம் விரும்புகிறேன்.

அரசாட்சி செய்யும் விருப்பமில்லை.
நீ அரசாளவே உன் முன்னால்.

"உடன் இருக்கவேண்டும்.
மணிக்கணக்கில் பேசவிட்டு
கேட்டுக் கொண்டிருக்கவேண்டும்.
உன் மெளனம் பிரசவிக்கும்
வார்த்தையாகி
மனம் சுமக்கவேண்டும்.
சன்னப்பின்ன மழைப்போல
நீ வானம்பார்க்க இரசிக்கவேண்டும்.
என் ஆயுள் பிரிந்தாலும்
இது தொடர்ந்திடல் வேண்டும். யாசிக்கிறேன்.

இந்த உணர்வின் கனம்
உன்னால் சுமக்கமுடியாது.
நான் சீக்கிரம் மரித்துவிடவேண்டும் பிரார்த்திக்கிறேன்.

உன் நெஞ்சுக்குழி பரிக்கும்
சுடுமூச்சென உயிராகி.
இன்னொரு பிறவியாகி.

பைராகி

எழுதியவர் : பூக்காரன் கவிதைகள் - பைராகி (25-Nov-23, 2:15 am)
பார்வை : 16

மேலே