விவசாயம்
![](https://eluthu.com/images/loading.gif)
விவசாய நிலம் இன்று விசம் பாயும் நிலம் ஆனது,
தொழிற்சாலை கழிவு நீர் வரப்பின் வலப்புறமும் இடப்புறமும் ஓடுது,
வாழையெல்லாம் சீக்கு வந்து கிடக்குது
நெல் மூட்டை எல்லாம் குடோனுக்குள் முடங்குது,
தட்டி கேட்க யாரும் இல்லையே, பச்ச வயக்காடு இப்பொ கண்முன்னே காயுது,
கட்டி காத்து வந்த வயல்நிலம் கட்டிடமா மாறுது,
இனி வரும் தலை முறை எல்லாம் வயல் நிலத்தை வலைத்தளத்தில் தான் கானுமோ என்ற அச்ச உணர்வு என்னுள் தோன்றுது..