காதலர்களின் கஜானா

காதலர்களின் கஜானா
----------**********-------------நீ
அனுப்பும்
குறுஞ்செய்திகளில்
நிறைந்து இருக்கிறது
உன்னைக் காணத்துடிக்கும்
என்னுடைய ஏக்கங்கள்...
*
அவ்வப்போது ஏற்படும்
ஊடல்களில் உறுமுகிறது
தலையணை மேலிருக்கும்
என் கைபேசி...
*
நான்
தினமும்
உன்னைத்தான்
என்
வீட்டுக்கூரைச் சந்தில்
காண்கிறேன் என்பது
அந்த
நிலவிற்கு
மட்டும்தான் தெரியும்...
*
என்
இரவுகளின் வெளிச்சம்
எரிகின்ற
உன்
கண்களில் ஒளிர்கின்றன...
*
உனக்கு வலிக்குமே
என்பதனால்தான்
கசாப்புக் கடைத் தராசில்
எடைக்குப் போகாமல்
இருக்கிறது
என் இதயம் !
*
அந்த
நீலவானில்
கிழிந்து தொங்குவது
காதல் சூத்திரமல்லவோ !

என் மார்பு
தடவி மையல்
நூற்கும் மஞ்சள் நிலவே..!

காத்திருப்பது என்பது
காதலர்களின் கஜானா தானே..!
------------------------------------------------------------------
-திருமூர்த்தி

எழுதியவர் : திருமூர்த்தி (18-Jun-16, 11:28 am)
பார்வை : 109

மேலே