என்னுடைய குழந்தைப் புகைப்படம் ...எனது செல்லப்பெயர் ஆனந்த்..வீட்டில்....உறவினர்கள்,நண்பர்கள்..,எங்கள் ஊர்...
என்னுடைய குழந்தைப் புகைப்படம் ...எனது செல்லப்பெயர் ஆனந்த்..வீட்டில்....உறவினர்கள்,நண்பர்கள்..,எங்கள் ஊர் மக்கள் எல்லோருக்குமே என்னை ஆனந்த் என்றால்தான் தெரியும்...பள்ளி கல்லூரியில் மட்டுமே எனது பெயர் திருமூர்த்தி ...எனக்கு ஆனந்த் எனற பெயர்தான் மிகவும் பிடிக்கும் ..நன்றாக ஞாபகம் இருக்கிறது ..கோபிசெட்டிபாளையம் புகைப்படக் கடையில் அப்பா இருக்கையில் அமர்ந்துகொண்டு என்னை பக்கத்தில் நிற்கவைத்து படம் எடுக்கச் சொன்னார் ..ஆனால் நான் அடம்பிடித்து தூக்கிகொள்ளச் சொன்னேன்...பிடிவாதத்தோடு அழுததால் எனது ஆசைப்படியேஅவர் தூக்கிக்கொண்டு படம் எடுத்தார் ..பாருங்கள்,அழுத முகத்தோடு எனது உதடுகள் எவ்வளவு பிதுங்கி உள்ளது என்று ...
இந்தப் புகைப்படம் எனது பழைய புத்தகங்களை தூசிதட்டி தூய்மைப் படுத்தும்போது நினைவின் அச்சில் மீண்டும் பதிப்பேறியது ....இந்த போகிப்பண்டிகையில் மலர்ந்தது எனது மழலை கனவுகள் ...
அப்பாவுக்கு பெண் குழந்தை என்றால் மிகவும் விருப்பம் ..அதனால்தான் என்னை இப்படி அழகாக சீவி சிங்காரித்து இருக்கிறார் ... இந்த கணம் நான் ஏதோ ஒன்றை அவரிடமிருந்து இழந்து விட்டதாக மனது உறுத்துகிறது ...
நன்றி ...
வாழ்வின் ரசனைப் பயணத்தில் ..
திருமூர்த்தி