என் கவிதை

என் கவிதை எனக்குள் நான்
விதைத்த ஓர் விதை,
கனவுக்குள் உறங்கிய கருத்திற்கு நான்
இட்ட ஓர் உருவம் .
பிறர் அறியா உணர்வுகள் எனக்குள்
பிரவேசிக்க நான் அடைந்த
ஓர் மாற்று பாதை- என்னுள்
எழுந்த எழுச்சி கருத்துக்கள், எழுத்துகளால் ,
உருபெற்ற ஓர் குறிப்பேடு.....
என் கவிதை எழுத்துகளால் நான் வரைந்த ஓவியம்
என் மனம் நினைத்தவற்றை பிறர் உணர
உதவும் காவியம்....
நிறைவேறா ஆசைகளும் , நிமிர்ந்து நில்லா
உணர்வுகளும்,
மகிழ்ச்சியின் வெளிப்பாடும் , மதி மயங்கிய
கூப்பாடும்,
மனதின் உட்பாகமும் , கவலையும் உள்ளிருந்து
வெளியேறி ஓரிடத்தில் நின்று!
எழுத்து வடிவாய் வெளிப்பட்டு
பேனா என்னும் வாகனத்தின் வழியே
காகிதம் என்னும்
சொர்க்க வாசலை அடைவது
தான் என் கவிதை.

எழுதியவர் : ஈரோடு dheva (14-Sep-15, 2:10 pm)
Tanglish : en kavithai
பார்வை : 76

மேலே