உயிரில் வடிகின்ற தேன்

உயிரில் வடிகின்ற தென் .

கடல் ஆழம் என்கிறார்கள்
சங்கச் செய்யுட்கள் படிக்காதவர்கள் .

ஆல மர ஆணி வேரே காழ்ப் புணர்ச்சி கொள்ளும்
தமிழ்க் காவியங்கள் கண்டு .

தமிழ்ச் சொற்கள் எடுத்து
கள்ளிச் செடியில் தூவினேன் அடடா என்றன ரோஜாப் பூக்கள்
அதன் அழகு பார்த்து .

தமிழில்
காதல் கவிதைகள் படித்து விட்டு தண்ணீர் குடித்தேன்
அது இனித்தது தேனை வென்று .

சேவல் இன்னும் கூவுகிறது
ஒரு நாள் தமிழில் கூவுவேன் என்ற எதிர் பார்ப்புடன் .

தேனீக்களின் பிரார்த்தனை
செடியில் பூக்களுக்குப் பதிலாக தமிழ் பூக்க வேண்டுமாம் .

தமிழ் பேசும் இல்லம் என்று முத்துக்கள் அறிந்தால்
மறுக்கும் கடலில் விளைய .

தமிழைக் காதலிக்கிறேன்
நான் மரணிக்காமல் வாழ்வதற்காக .

பாரதி கவிதை மூங்கில் காட்டில் படித்தால்
தமிழ் பேசத் தொடங்கும்
புல்லாங்குழல்கள் .

வெள்ளைப் பூக்களிடம்
காதலிக்கிறேன் என்று தமிழில் கூறினேன்
பல வர்ணங்களாகின
உதிரவில்லை பல வருடங்களாகியும் .

மரணிக்காமல் இருக்க வைக்கும் மருந்து
தமிழ்
தமிழ் .

தமிழுக்கு உயிர் இருக்கும் வரை
மரணிப்பதில்லை
தமிழ் மூச்சும் பேச்சும் .

- ராஜகவி ராகில் -

எழுதியவர் : ராஜ கவி ராகில் (14-Sep-15, 4:03 pm)
சேர்த்தது : Rajakavi Rahil
பார்வை : 88

மேலே