கற்பி - போட்டி கவிதை
---------- உனக்கு தெரிந்தவற்றை யாவருக்கும் கற்பி
---------- நீயே நாளைய சமுதாயத்தின் சிற்பி
---------- போற்றி புகழப்படுவாய் புகழ்பாக்களால் கற்பி
---------- இயன்றளவு வையகமும் மெச்சிடும் கற்பி
---------- சிறகில்லா சிறார்களுக்கு சிறகாய் முளைத்திடுவாய்
---------- சிறகு முளைத்திட்ட இளசுகளுக்கு ஆகயமாகிடுவாய்
---------- நித்தம் வருங்காலம் உனதென்று உரைத்திடுவாய்
---------- உன்பெயரை வரலாற்றில் பொன்னெழுத்தில் பொறித்திடுவாய்
---------- நீயே நாளொரு வண்ணமாய் போற்றப்படுவாய்
---------- நீயே நாளேடு செய்தியாய் பேசப்படுவாய்
---------- நீயே ஆதி முதல் அந்தமாகிடுவாய்
---------- நீயே வரும் உலகிற்கு ஜோதியாகிடுவாய்
---------- இமயமும் நீயென்றால் வழிவிடும் தன்னால்
---------- யென்றும் வெற்றி உன் முன்னால்
---------- பெற்றவள் கொள்வாள் பெருமை உன்னால்
---------- யென்றும் இளமைக்கூட்டம் உன் பின்னால்
---------- கற்பி கற்பி கற்பி கற்பி
---------- கருவறை கல்லறை பாராமல் கற்பி
---------- கற்பி கற்பி கற்பி கற்பி
---------- மார்பால் ஊட்டா தாய்மையடைவாய் கற்பி
குறிப்பு : இக்கவி மே மாதம் புதுவை தமிழ்ச் சங்கத்தில்அம்பேத்கர் விழா மற்றும் பாவேந்தர் பாரதிதாசன் விழா சார்பில் நடைபெற்ற கவிதை போட்டியில் 2 ஆம் பரிசு பெற்றது....