இளங்கோவன் - சுயவிவரம்

(Profile)வாசகர்
இயற்பெயர்:  இளங்கோவன்
இடம்:  நாகை மாவட்டம்
பிறந்த தேதி
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  21-Dec-2015
பார்த்தவர்கள்:  67
புள்ளி:  6

என் படைப்புகள்
இளங்கோவன் செய்திகள்
இளங்கோவன் - பிரவீன்குமார் அளித்த கேள்வியில் (public) கருத்து அளித்துள்ளார்
19-Jul-2016 8:24 pm

தற்போது திருட்டு விசிடியில்
படம் பார்பது சரியென ஒரு சில பேர் கூறிவருவது சரியா? அப்படி அவர்கள்
சொல்ல காரணம் என்ன?

மேலும்

லாப நோக்கத்திற்காக வெளிநாடுகளுக்கு தயாரிப்பாளர்களே டிவிடி யை இந்தியாவில் திரையிடப்படும் தேதிக்கு முன்னரே கொடுத்துவிடுகின்றனர். இதிலிருந்தும் திருட்டு விசிடி தயாரிக்கப்படுகிறது. மேலும், தொழில் நுட்பங்கள் அதிக அளவில் வளர்ந்த இந்த நாட்களில் இது போன்ற குற்றங்கள் தடுக்க இயலாது. மலிவு விலை பொழுது போக்கு கிடைப்பதை தடைசெய்ய வேண்டும். அல்லாது விசிடி காண்பவர்களை குறை சொல்லுதல் கூடாது. கிடைக்க பெறுகிறது பார்க்கிறார்கள். சிகரெட்டை போலதானே இதுவும் விற்காவிட்டால் யாரும் புகைக்க போவதில்லை. விற்பதை தடைசெய்யும் வழிமுறையினை யோசிக்க வேண்டும். அல்லது விசிடியை அதிகாரபூர்வமாகவே சினிமாகாரர்கள் விற்க வேண்டும். 21-Jul-2016 1:55 pm
அந்த விசிடி பெயரே "திருட்டு விசிடி " ஆனால் அதை பார்ப்பது தவறில்லையாம் .. என்ன வேடிக்கை இது ???!!!! 20 ரூபாய் கொடுத்து விசிடி வாங்கியதால் நான் எப்படி திருடன் ஆவேன் என்று கேட்பது முட்டாள்தனமாக இருக்கிறது ,, 20 ரூபாய் கொடுத்து தடை செய்யப்பட்ட பொருட்களை வாங்குவது குற்றம் .. கட்டணம் மற்றும் திரையரங்கம் நல்ல சூழலில் இருந்தால் இது போன்ற விசிடி குறையும் ... 20-Jul-2016 2:23 pm
கள்ள மார்க்கெட்டிலும் கதாநாயகனின் மார்க்கெட் கீழே விழாமல் பார்த்துக் கொள்கிறார்களே --அதனால் இருக்கும் 19-Jul-2016 9:39 pm
இளங்கோவன் - பழனி குமார் அளித்த எண்ணத்தில் (public) கருத்து அளித்துள்ளார்
20-Jul-2016 9:37 pm

எழுத்து தளத்தின் மூலமாக எனக்கு அறிமுகமான நண்பர்  , மரபுக் கவிஞர் திருமதி சியாமளா ராஜசேகரன் அவர்களின் மூத்த மகன் திடீரென்று மாரடைப்பால் காலமானார் என்ற செய்தி இன்று மாலை கவிஞர் திருமதி சகானா தாஸ் மூலமாக அறிந்து மிகவும் அதிர்ச்சி அடைந்தேன். 


நான் ஒரு முறை அவர்கள் இல்லம் சென்ற போது அவர் எங்கள் குடும்பத்தினரை  வரவேற்று உபசரித்த காட்சி இன்னும் எனது மனதில் ஓடி கொண்டிருக்கிறது. பசுமையாக நினைவில் உள்ளது .
சிரித்த முகமுடன் எங்களுடன் பேசிக் கொண்டிருந்த காட்சி மறக்கவே முடியாது. 
அவர்களுக்கு இது ஈடு செய்ய முடியாத பேரிழப்பாகும் . 

திருமதி சியாமளா ராஜசேகரன் அவர்களுக்கும் அவர்தம் குடும்பத்தினருக்கும் எனது சார்பாகவும் எங்கள் குடும்பத்தினரின் சார்பாகவும் ஆழ்ந்த இரங்கலையும் , அனுதாபங்களையும் வருத்தத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன் 
ஈடு செய்ய முடியாத இழப்பு. மிகவும் வருந்தத்தக்க நிகழ்வு. 

காலம் ஒன்றுதான் அவர்களுக்கு மருந்தாக இருக்கும்.

ஆறுதல் கூறிட வார்த்தைகள் இல்லை. 

பழனி குமார் 

மேலும்

ஆழ்ந்த அனுதாபங்கள் 21-Jul-2016 1:47 pm
மிகவும் அதிர்ச்சியான செய்தி... அவர்களுக்கு ஆழ்ந்த அனுதாபங்கள் ஐயா... ஈடு செய்ய முடியாத இழப்பு..... 21-Jul-2016 7:27 am
இளங்கோவன் - சஹானா தாஸ் அளித்த எண்ணத்தில் (public) கருத்து அளித்துள்ளார்
20-Jul-2016 11:22 pm

இங்கே  பகிர்விற்கும்  கருத்திற்கும்  அளிக்கப்படும்  மதிப்புகள்  எந்த   மனிதருக்கும்  அளிக்கப்  படுவதில்லை. என்றைக்கும்  பதிவிடுவோர்  கருத்துக்களை   பதிவோர்  பல   நாள்   தொடர்ச்சியாக   காணவில்லையெனில்  அவர்களைப்   பற்றி   விசாரிப்போம்  என்ற   எண்ணம்   கூட  இல்லாதவர்கள்  எப்படி   மனிதனாக   இருக்க   முடியும்  அதிலும்   கவிஞர்களாக   இருக்க   முடியும். மற்றவர்களின்   வலியியைப்  பிழிந்து   கவிதை   சாறு   எடுத்து   தங்கள்   படைப்புக்களுக்கு   கரு   கொடுக்கும்  அற்பர்களை  என்னவென்று  சொல்வது? ஒரு   நல்ல   கவிஞன்  என்பவர்   எழுதித்   தான்   தன்னுடைய  திறமையை   வெளிப்படுத்த   வேண்டும்   என்றில்லை  மற்றவர்களின்  உணர்வுகளை  மதித்து   மனித   மாண்புடன்  வாழ்ந்தாலே   போதும். 

குற்றுயிராய்  
கிடப்பவனின்   
குருதி  ஊற்றி  எடுத்து  
தன்  எழுதுகோலுக்கு  
உயிர்  கொடுக்கும்  
ஜடங்களாய்  போன  
பிரம்மாக்களை  என்ன  சொல்வது?

மேலும்

தங்களின் மூலமே செய்தி அறிந்தேன் மிகவும் வருத்தமாக உள்ளது. நீங்கள் சொல்வது சிந்திக்க வேண்டிய ஒன்று நண்பரே. மிகவும் வருந்துகிறேன். 29-Jul-2016 4:20 pm
குட் 29-Jul-2016 1:04 pm
உங்கள் கண்டனத்தை காகிதத்தில் எழுதி வாசலில் தொங்க விடுங்க அதுக்கு பதில் சொல்லும் அவசியம் எனக்கில்லை 29-Jul-2016 1:03 pm
இங்கே கருத்திற்கும் மதிப்பெண்ணுக்கும் மட்டுமே இடம் 29-Jul-2016 1:01 pm
இளங்கோவன் - அருண்ராஜ் அளித்த கேள்வியில் (public) கருத்து அளித்துள்ளார்
26-Jun-2016 12:38 pm

இந்து பெண்ணுக்கு நேர்ந்த இந்த துக்க கரமான இந்த சம்பவம் ஒரு முஸ்லிம் பெண்ணுக்கோ அல்லது சிறுபான்மை பெண்ணுக்கோ நேர்ந்தால் என்ன செய்திருப்பார்கள் இந்த ஊடகம் மற்றும் அரசியல் வாதிகள் ..??!!

இந்துத்துவா என்பதை யார் வளர்க்கிறார்கள் ..?? இது போன்ற சம்பவங்களா???

மேலும்

நீங்கள் சொல்வது போல் பார்த்தால் தலித்துகள் வாழும் பகுதியில் ஒரு தலித்துக்கு கொலை நடந்தால் மேல் மட்ட ஜாதிகள்மற்றும் ஆண்ட ஜாதிகள் அமைதியாக கடந்து விட வேண்டுமா ...!!!!!?? அதை தடுக்க கூடாத ??!! எங்கள் ஊரில் வாழும் கீழ் ஜாதி மக்கள் காலை சீக்கிரமே குப்பை கூட்ட வருவார் அங்கு அவர்கள் தான் நிறைய இருக்கின்றனர் அப்போது அங்கு ஒரு கொலை நடந்தால்.. தடுக்க வேண்டியது மேல் ஜாதி மக்கள் பொறுப்பு இல்லையா..?? நீங்கள் சொல்வது வேடிக்கையாக இருக்கிறது .. 28-Jun-2016 8:44 am
நான் சொல்வது பிழை என்றால் மன்னியுங்கள் ஊடகத்தில் .. facebook இல் இடை போல் செய்தியைப் பார்தேன் .......... பெரும்பாலும் காலை 5 முதல் ரயிலில் வருபவர்கள் எல்லோரும் ஸ்வாதி இனமே .. மேல் மட்ட ஜனங்களே ..அய்யரும் மாமியும் தான் ஏன் மற்றவர்களை குறை சொல்கிறீர்கள் என எனக்கு தெரியவில்லை மற்றும் நுங்கம்பாக்கம் அவர்கள் சமூகம் நிறைய வாழும் பகுதியே .. காலை எழுபவர்களும் அவர்களே மனிதாபத்துடன் வேலை முக்கியம் என்றால் மற்ற விளம்பரம் பண்ணி என்ன பயன் ? 27-Jun-2016 10:02 pm
என் சங்கர் கொலையை கொலையாக எண்ணி எண்ணி அதை கொலையாக பார்க்கலாமே . சிறுபான்மை நல துறை அமைப்பு ஏன் வேலை வாங்கி தர வேண்டும் .. அரசாங்கம் பொருள் உதவி ஏன் செய்ய வேண்டும் ..??? ஸ்வாதிக்கு எந்த நலத்துறை உதவி செய்யும்... சொல்லுங்கள் .. பிறகு இதை கொலையாக மட்டுமே பார்க்கலாம் ..!!! 27-Jun-2016 6:26 pm
கேள்வி எழுப்புவதே கேவலமா !!! கேள்வி சரியானதாக இருக்க வேண்டிய எந்த அவசியமும் இல்லை கட்டாயமும் இல்லை .. அதற்கான பதில் தான் சரியாக இருக்க வேண்டும் அரசியல் கட்சிகள் மக்களுக்காக தானே . ஒருத்தி கோரமான முறையில் இறந்து கிடக்கிறார்கள் ..கண்டனம் சொல்ல ஆள் இல்லை ..ஆளும் அரசாங்கம் அமைதியாக இருக்கிறது .. இதுவே வேறு மதமோ சாதியோ இருந்தால் இந்த கொலையை எப்படி அணுகி இருப்பார்கள் என்று ..இதை தான் கேட்கிறார்கள் .. இந்த கேள்வியை கேட்பதால் என்ன தவறு .. கேள்வி எழுப்புவது குற்றமா ..!!!! 27-Jun-2016 6:23 pm
இளங்கோவன் - கேள்வி (public) கேட்டுள்ளார்
27-Mar-2016 2:02 pm

மக்கள் நலன் கூட்டணியுடன் விசயகாந்த் தலைமையிலான தே.மு.தி.க கூட்டணி அமைத்திருக்கிறது. இந்த கூட்டணி வெற்றிப்பெற்று ஆட்சி அமைத்து விசயகாந்த் முதலமைச்சராக பதவி ஏற்பாரா ?

உங்கள் வாக்கு ம.ந. கூ+ தே.மு. தி.க விற்கு அளிப்பீர்களா.?

ஆம் எனில் ஏன்.?

இல்லை எனில் ஏன் ?

மேலும்

.......... 13-Apr-2016 12:23 pm
கேள்வியில் விழி கொடுத்து பதில் அளித்த அனைவருக்கும் நன்றி. 11-Apr-2016 10:46 pm
எது எப்படியோ முதலில் தன்னைத் தானே பெருமைப் பேசும் அரசியல் கட்சிக்கு என் வாக்கு இல்லை. என்பதே உறுதி. 11-Apr-2016 7:57 am
NOTA விற்கு என் வாக்கு . விஜயகாந்த் மீதும் நம்பிக்கை இல்லை.. 30-Mar-2016 3:41 pm
இளங்கோவன் - எண்ணம் (public)
08-Mar-2016 3:09 pm

கண் முழித்த நேற்று
இராத்திரி முழுவதும் சிவமயம்.
கண் விழித்த இந்த
பொழுது முழுவதும் சக்தி மயம்.

மகளிர் தின வாழ்த்துக்கள்!

மேலும்

மகளிர் தின நல் வாழ்த்துக்கள் 09-Mar-2016 4:19 am
சக்தியேசிவம் ஆன்மிகம் தழைக்கட்டும் பாராட்டுக்கள் நன்றி ... 09-Mar-2016 12:04 am
இளங்கோவன் - படைப்பு (public) அளித்துள்ளார்
14-Jan-2016 10:51 am

அவசர சாலையொன்றில்
யாசகன் ஒருவனின்
ஒவியமொன்று
காணக் கிடைத்தது.
நதியாக ஓடுவதாக வரையப்பட்ட
கோட்டோவிய வண்ணக் கோடுகள்
சில பரிசல்கள், சில மக்கள்
அவர்களோடு சில சுமைகள்
அவர்களுக்கும் அவர்கள் சுமைகளாக..

ஒடும் வண்ண நதியில்
ஓர் இலையை காப்பாற்றும்
ஒரு செந்நிற எறும்பு.

நதியின் கரையில்
ஒரு தென்னை மரம்.
சற்று கூன் வீழ்ந்த கிழவிப்போல..
அதிலோர் ஊஞ்சல்
ஊஞ்சலில் ஒரு சிறுமி.
சிறுமிக்குப் பின்புறம்
அந்தியாய் சிவக்கும் வானம்.
சற்று உயரே.. ஒரு வெள்ளை நிலா..

சற்றுத் தள்ளி
ஒரு வயல் வெளி.
செ.மீ இடைவெளியில்
நிற்கும் காதலர்கள்அழகியல் பாடும் இவ்வோவியத்தில்
ஒவியர் என்ன சொல்லியிருக்கிறா

மேலும்

நிதர்சனக் காட்சிகள் காதலும் இயற்கையும் இனிய தைத்திருநாள் நல் வாழ்த்துக்கள் இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 14-Jan-2016 11:57 am
இளங்கோவன் - எண்ணம் (public)
23-Dec-2015 12:07 pm

நான் இளங்கோவன்

என் விரல்களின் வனத்திலிருந்து முளைத்தெழுந்த வார்த்தைகளை கவிதையாக பதிவு செய்யத் தொடங்கியிருக்கிறேன் . அன்புள்ளங்கள் வாசித்து நேசித்து , என் பிழைகளை  ஜீரணித்து கருத்துப் பதிய வேண்டுகிறேன், 

மேலும்

மேலும்...
கருத்துகள்

மேலே