எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

இங்கே பகிர்விற்கும் கருத்திற்கும் அளிக்கப்படும் மதிப்புகள் எந்த மனிதருக்கும்...

இங்கே  பகிர்விற்கும்  கருத்திற்கும்  அளிக்கப்படும்  மதிப்புகள்  எந்த   மனிதருக்கும்  அளிக்கப்  படுவதில்லை. என்றைக்கும்  பதிவிடுவோர்  கருத்துக்களை   பதிவோர்  பல   நாள்   தொடர்ச்சியாக   காணவில்லையெனில்  அவர்களைப்   பற்றி   விசாரிப்போம்  என்ற   எண்ணம்   கூட  இல்லாதவர்கள்  எப்படி   மனிதனாக   இருக்க   முடியும்  அதிலும்   கவிஞர்களாக   இருக்க   முடியும். மற்றவர்களின்   வலியியைப்  பிழிந்து   கவிதை   சாறு   எடுத்து   தங்கள்   படைப்புக்களுக்கு   கரு   கொடுக்கும்  அற்பர்களை  என்னவென்று  சொல்வது? ஒரு   நல்ல   கவிஞன்  என்பவர்   எழுதித்   தான்   தன்னுடைய  திறமையை   வெளிப்படுத்த   வேண்டும்   என்றில்லை  மற்றவர்களின்  உணர்வுகளை  மதித்து   மனித   மாண்புடன்  வாழ்ந்தாலே   போதும். 

குற்றுயிராய்  
கிடப்பவனின்   
குருதி  ஊற்றி  எடுத்து  
தன்  எழுதுகோலுக்கு  
உயிர்  கொடுக்கும்  
ஜடங்களாய்  போன  
பிரம்மாக்களை  என்ன  சொல்வது?

பதிவு : சஹானா தாஸ்
நாள் : 20-Jul-16, 11:22 pm

மேலே