தமிழ்

செங்கரும்பின் நறுஞ்சுவையே..!
மழலை மொழியின்
நாவற்பழமே..!
என்
உயிர் மூச்சை
கணித்த தமிழே !
தாய்ப்பாலின் உதிர்த்தில்
கலந்த தமிழே !
பட்டுவிரல் தொட்டு
பூந்தமிழ் எழுதுகையிலே
உச்சிமுதல் பாதம்வரை
உடலெங்கும் சிலிர்க்கின்றதே !
சீண்டுபவர்க்கு அஞ்சாத அழகுத்தமிழே !
புரட்சியின் வேர்பாய்ந்த
மிரட்டும் தமிழே !
என் ரத்தத்தின்
ஓட்டத்தில் கொட்டும் முரசு -நீ
கவிதைக் கனிகள்
கனிந்து குலுங்கும் பழந்தமிழே !
பல்லவிகள் சரணங்கள் தப்பாத
பழகுதமிழே !
விஞ்ஞான வித்தைகளின்
வில் அம்பு -நீ
காலங்கள் கரைந்தபோதும்
விரைந்து பயணிக்கும்
நறுந்தமிழே ! - என்
சித்தம் அடங்கிய பின்னும்
கட்டை எரிகையிலே
கடைசிச் சத்தமும்
தமிழையே முழங்குமே !
-------------;;;------------------------------------;;;;;;--------
- திருமூர்த்தி

எழுதியவர் : திருமூர்த்தி (18-Jun-16, 1:28 am)
பார்வை : 197

மேலே