நெடுந்துயில் ,

நெடுந்துயில்
----------------------

அந்த மேகத்தின்
விளிம்பில் கட்டப்பட்டிருக்கும்
அக்கினி நாடாக்கள் அவிழ்ந்து
அவள் விழிகளில் விழுந்து
அந்தியை பழுப்பேற்றிக் கொண்டிருந்த
வானில் பறக்கிறது
எனது கண்களிரண்டும்...

பூநார் கிழித்து நெய்த
பாதங்களைக் கழுவிக்கொண்டிருந்த
ஓடைக்கரையில்
தயார்நிலையில் நின்றிருந்தன
காகித ஓடங்கள்...

காற்றில் மிதந்துவந்து
எனது காதுகளுக்குள்
குமிழிகளின் மொழியைத் தடவுகிறது
மீன்கள் பாடும் சங்கீதம்...

அடர்ந்த இருளின்
முகடு உடைந்துகொண்டிருக்க
கண்ணாடித் துண்டுகள்
கவிழ்ந்தது...

சிற்றிலையின் நடுவிற் புகுந்து
மூங்கிலின் மூக்கை முத்தமிட்டு
மண்ணில் உடலைப் புரட்டிச் சுருட்டி
எனது கண்ணெதிரே வந்து
கனிகிறபோது
யாரோ
கனவிற்குள் கத்தியைவிட்டு
சுழற்றிய முனையின்மீது
பயணித்துக்கொண்டே
சுமைகளைத் துவைத்துக்
காயப்போட்டு விட்டு
இமைகளைத் திறக்கையில்
கண்முன்னே அறுந்து தொங்குகிறது
திராட்சைக் கொத்துகள் !
--------------------------------------------------------------
-திரு

எழுதியவர் : திருமூர்த்தி (18-Jun-16, 1:31 am)
பார்வை : 185

மேலே