விடை தெரியாத கேள்விகள்
வீட்டிலே அலுவலகம்,
கொரோனா தந்த கொடை.- வெகுசில
காலம் மட்டுமே !
வீட்டை அலுவலகமாய் மாற்றி,
குளியலும், உறங்களும் தவிர
அனைத்தும் அந்த தீடிர் மேசையின்
முன்பு தான்.
முகத்தை பார்த்து பேசும் காலம் மாறி
உறவுகளிடம் காதுகளை மட்டும்
இரவலாக கொடுத்து,
கவனத்தை கணிப்பொறியிலும்,
கணிப்பொறியில் தெரியும்
கனவான்களிடம் வைத்து...
இதனை மாதங்கள் ஓட்டியாகிற்று.
இன்னும் எத்தனை மாதங்களோ
தெரியவில்லை....
இது வரமும் இல்லை,
சாபமும் இல்லை,
வரசாபமாக தெரியத்துடங்கிற்று...
அப்படி இருந்த ஒரு நாளில்,
காலை வேலையில்
முந்தைய நடுராத்திரியில் -விட்ட
பணியை துண்டங்க ஆயத்த மானேன்.
நான் வசித்துக்கொண்டிருப்பது,
முதல் மாடியில்,
பெரிய தனி வீட்டில்...!
எப்பொழுதும்போல் அன்றும்,
அக்கா அக்கா,
தக்காளி, புளிச்சக்கீரை, வெண்டைக்காய்
முள்ளங்கி இன்னும் ஏதேதோ சொல்லி
கூக்குரலிட்டான்...
அந்த கூக்குரல்,
என் வேலைக்கு இடைஞ்சலாய்
பட்டு, கோபத்தை கீபோர்டில் காட்டி,
ஒரு நிமிடம் என்று ரோபோ புன்னகையோடு,
கணிப்பொறியில் தெரியும் சகாவிடம் சொல்லி...
வெளியே வந்து - எதுவும் வேண்டாம்
என்று அபூர்வ ராகங்கள் கமலஹாசன் போல்
மாடி போர்டிக்கோவில் இருந்து கொண்டே,
குரலாலே விரட்டினேன்...
இருபது நிமிடங்கள்,
நிம்மதியாய் வேலையோடியது,
ஹலோ சார் ஹலோ மேடம்,
அமேசான்....
சலிப்போடு வாங்கி,
கொரோனாவை கொள்ள
வெயிலில் கிடத்திவிட்டு,
கைகழுவி, கீபோர்டில் ஈரம் படாதவண்ணம்
டிரௌசரில் கை துடைத்து
வேலையே தொடர்ந்தேன்...
முப்பது நிமிடங்களில்
அய்யா அய்யா
குப்பை இருந்தா வாங்க...
ஐயாவோடு விசில் சத்தம் வேறு...
இந்த முறை பற்களை மட்டும்
கடித்த படி தொடர்ந்தேன்...
மணி சரியாக 11 இருக்கும்...
சார் சார்...
சார் சார் ..
சார் சார்...
இரும்பு கேட்டை இருமுறை தட்டி, சத்தம் இட்டு,
சார் சார்...
சார் சார் ..
சார் சார்...
நான் எப்போதும் போல்,
ஒரு கணிப்பொறி தொடர்காலில் இருந்தேன்...
சத்தம் பொறுக்க முடியாமல்,
ஒரு நிமிடம் மன்னிப்பு கேட்டு.விட்டு,
வெளியே வந்து பார்க்கிறேன்...
கீழே நிற்பவர்,
ஒரு அறுபத்து ஐந்து வயது மதிக்க தக்கவர்,
கண்ணில் பழைய சோடாபுட்டி கண்ணாடி,
முள் கைக்கடிகாரம், இரு கரத்திலும்,
பஞ்சுபோல் வெளுத்த நரைமுடி,
இடது கையில் ஒரு ரெக்ஸின் பை.
வரி இட்ட அரைக்கை சட்டை,
சலவை செய்து இஸ்திரி போட்ட,
அளவான பாண்ட்.
காலில் பாட்டா செருப்பு,
சட்டை பாக்கட்டில்,
இங்க் பேணா,
மற்றும் சில பேப்பர் துண்டு சீட்டுகள்...
என்ன? சொல்லுங்க என்றேன்...
சார் கீழ வரமுடியுமா?
இல்ல இல்ல நீங்க சொல்லுங்க என்றேன்...
ஒன்னும் இல்ல,
அதாவது.....
.
ஐயா, சீக்கிரம் சொல்லுங்க
வேலை இருக்குனேன்...
தம்பி,
இன்னும் ரெண்டு மாசத்துல,
என் பொண்ணுக்கு கல்யாணம் வச்சிருக்கேன்...
கொஞ்சம் கஷ்டமா இருக்கு...
உங்க உதவி வேணும் என்றார் - அண்ணாந்து பார்த்தபடி!
கொஞ்சமும் தயக்கமின்றி,,
வெகு கம்பெறத்தொடும்,
சுயமரியாதைக்கு சிறு பங்கம் கூட விளைவிக்காதுபோல்
கேட்டார்..!
நான்,
சற்றும் யோசிக்காமல்....
அதெல்லாம் இல்லை,
போங்க போங்க..
நிறைய வேலை கிடக்கு என்று
திரும்புவதற்குள் -அவர் விடு விடுவேனா எதிர்
வீட்டிற்கு செல்கிறார்...
நானும்,
திருபம்பி வீட்டிற்குள் நுழைந்து
கணிப்பொறி காலை தொடர்கிறேன்...
கவனம்,
வேலையில் நிற்காமல்,
அவரை பற்றியே வந்து வந்து போனது...
காலை சட்டென துண்டித்து...
வெளியே ஓடினேன்...அந்த பெரியவரை நோட்டமிட
அதே பெரியவர்,
எங்கள் தெரிவில்,
இரு வீடுகள் தள்ளி,
ஒரு வயதான வீட்டில் வசிக்கும் முதியவரிடம்,
இதையே சொலிகிரார் போல...
அதற்கு,
அந்த முதிய வீட்டுக்காரர்,
உள்ளே சென்று, சற்று நேரம் கழித்து,
ஒரு நூறு ரூபாய் கொடுக்கிறார்.
அதை அந்த பெரியவர்,
வாங்க மறுத்து, நன்றி சொல்லி,
விடு விடுவேனா அடுத்த வீட்டிற்கு
செல்கிரார்...
இதே போல் பல வீடுகளுக்கு
சென்று, கம்பீரமாய் கடந்து சென்றபடி
ஓட்டமும் நடையுமாய் திரிகிறார்...
பின்பு என் பார்வையில் இருந்து
மறைந்தே விடுகிரார்...
என்ன வேண்டி வந்திருப்பார்...
பணமா?
அறிவுறையா?
ஆதரவா?
அன்பா?
ஒன்றும் விளங்க வில்லை...
இப்படி ஒரு நடுத்தர வர்க்க குடிமகன்,
நன்றாய் வாழ்ந்தவர் போல் தெரிகிறவர்,
வீடு வீடாய் சென்று இரவல்
கேட்ப்பது அவ்வளவு எளிதான
செயலா?
எப்படி முடிந்தது அந்த பெரியவருக்கு?
யாசகம் கேட்க்கும்போது,
அதே கம்பீரத்தோடு எப்படி
கேட்டகமுடியும்?
ஒரு வேலை அந்த பெரியவர்
இதெல்லாம் நினைத்து வந்திருப்பாரோ?
நீங்களும்,
நானும்
சக ஜீவ ராசிதானே என்ற அடிப்படையில்
கேட்க வந்தாரோ?
கொரோன காலத்தில்,
பணமும், உறவும், நட்பும்
வரப்போவதில்லை என்று மனிதன்
உணர்ந்துவிட்டான் - என்று
நம்பி வந்திருப்பாரோ?
அந்த பையில் என்ன வைத்திருந்திருப்பார்?
எந்த வீட்டாரும்,சொல்வதை நம்பப்போவதில்லை,
என்று தெரிந்து, உண்ணமையை ஊருக்குச்
சொல்ல திருமண பத்திரிக்கை
வைத்திருப்பாரோ?
தனது குடும்பத்திடம்,
யாசகம் கேட்க குடும்பத் தலைவன்
சென்று வருகிறேன் என்று சொல்லி வந்திருப்பாரோ?
இல்லை சொல்லமால் மனதை மட்டும்
திடமாக்கி வந்திருப்பாரோ?
வீட்டின் முன் வந்து,
கஷ்டம் என்றாரே...
என்ன வகையான கஷ்டமாய் இருக்கும் ?
மன கஷ்டமா?
பண கஷ்டமா?
உடல்பலவீன கஷ்டமா?
உறவில் கஷ்டமா?
உண்ணுவதே கஷ்டமா?
உறங்கமுடியாத கஷ்டமா?
தனிமை கஷ்டமா?
இன்னும் ஒரு முறை
அவரை பார்க்கவேண்டும்,
பார்த்து இத்தனை கேள்விகளையும்
கேட்டுவிட்டு...
காது கொடுத்தும்,
மனுது வைத்தும் உணர்த்துக்கொள்ளவேண்டும்......
கேட்டால் சொல்வாரா?
இல்லை அந்த தருணம் கடந்து விட்டது என்று
கடிந்து கொள்வாரா?
நான் ஏன் இப்படி நடந்தேன்?
ஒரு பத்து நிமிடங்கள் பேசி இருக்கலாம்,
அவரும் சொல்லி இருப்பார்...
மேல் இருந்தபடி பதில் சொல்வது
எந்த வகை மனு தர்மம்?
தெரு பிராணிகள் கூட,
மேலிருந்து விசிறியடித்த ரொட்டிகளை,
சில நேரங்கள் உண்ண மறுக்கின்றன ....
அது ஏன் புரியாமல் போயிற்று..?
என்னைப்போல்,
எங்கள் மொத்த தெருவாசிகளும் -அதே
நிலைபாட்டில் தான் நின்றனர்,
எதனால் அப்படி?
தெரியாத முகம் என்பதாலா?
இல்லை தெரிந்து கொண்டே
இவர் ஏன் இப்படி என்று
சகித்து கொள்ள முடியாமலா ?
இன்னும் பல இடர் காலங்கள் வரலாம்,
நாம் இன்னும் தனிமை படுத்த படலாம்...
இதை உணர்ந்து மனிதம் வளர்ப்பதே நன்று...
இதை உணர்த்தே அந்த பெரியவர் வந்திருப்பாரோ?
இப்படி எத்தனை எத்தனையோ
விடை தெரியாத கேள்விகள்....?