சிறந்த ஹைக்கூ

🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚

*குறுங்கவிதை*

படைப்பு *கவிதை ரசிகன்*

🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚

தீட்டிய மரத்திலேயே

பதம் பார்க்கிறது

மரங்கொத்தி

🦩🦩🦩🦩🦩🦩🦩🦩🦩🦩🦩

மாளிகையை கட்டியவன்

இரவில் படுத்திருக்கிறான்

மண்குடிசையில்

🦜🦜🦜🦜🦜🦜🦜🦜🦜🦜🦜

கவலைப் படுகின்றவர்களுக்கு

ஆறுதல் சொல்ல வரும்

கண்ணீர்

🐋🐋🐋🐋🐋🐋🐋🐋🐋🐋🐋

உறங்கி எழுந்ததும்

உடற்பயிற்சி செய்யும்

பூனை

🐱🐱🐱🐱🐱🐱🐱🐱🐱🐱🐱

வீடுகள் தோறும்

மரங்கள் இருக்கிறது

மரப்பொருட்களாக


*கவிதை ரசிகன்*

🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚

எழுதியவர் : கவிதை ரசிகன் (12-Dec-20, 8:52 pm)
Tanglish : sirantha haikkoo
பார்வை : 255

மேலே