இன்றைய கடையெழு வள்ளல்கள்

🐘🐘🐘🐘🐘🐘🐘🐘🐘🐘🐘

*சமூதாயக் கவிதை*

படைப்பு *கவிதை ரசிகன்*

🐘🐘🐘🐘🐘🐘🐘🐘🐘🐘🐘

இன்றைய
மனுநீதி சோழர்கள்
பசுவையே!
தேர் சக்கரத்தில் இட்டு
நீதியை காக்கின்றனர்
தனக்காக மட்டும் ...

இன்றைய பேகனும்
மயிலுக்குப் போர்வை
அளிக்கின்றான்
வாடகைக்கு.....

இன்றைய
சிபி மன்னர்களோ
அரிகின்றனர் தசைகளை
தன்னுடையப் பசிக்காக
புறாவிடமிருந்து...

இன்றைய பாரிகள்
கொடிக்காக
தேரை என்ன?
தன்னையே!
கொடுக்கின்றனர்
கம்பமாக்கி கட்டிக்கொள்ள...!

சம்மந்தமே இல்லாத
ஔவைக்கு
நீண்ட ஆயுள் தரும்
நெல்லிக்கனியை தந்த
அதியமான் வம்சத்தில் வந்த
வாரிசுகள் தான்.....
இரதத சம்மந்தமே உள்ள
பெற்றோர்களை
அனாதையாக
தெருவில் விடுகின்றனர்....!

🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚

கீதை
இந்துக்களை உருவாக்கியது

பைபில்
கிறிஸ்தவர்களை உருவாக்கியது

குர்ஆன்
முஸ்லிம்களை உருவாக்கியது

அதுசரி.....

மனிதர்களை
உருவாக்குவது எது...?

*கவிதை ரசிகன்*

🐘🐘🐘🐘🐘🐘🐘🐘🐘🐘🐘

எழுதியவர் : கவிதை ரசிகன் (14-Dec-20, 8:53 pm)
பார்வை : 81

மேலே