கண்ணே பாப்பா

கண்ணே பாப்பா

நேரிசை ஆசிரியப்பா

தொட்டுத் தாலி கட்டிய மனைவி
கட்டிலில் தொட்டுத் தழுவிடக் கண்ணே
கட்டிக் கரும்பாய் நீயும் பிறந்தாய்
இருகை நீட்டி ஆவலாய்த் தூக்க
உரம்விழும் தூரப் போவெனத் தடுத்தார்
சிறுகை விரல்கள் குறுகுறு வெனவும்
நறுந்தொடைக் கால்கள் துள்ளி யுதைக்க
காலுதை வாங்க நீட்டிய முகத்தில்
நாலுதை விட்டாய் நானெனை மறந்தேன்
நீயும் செய்தாய் நிறைவாய் பயிற்சி
நினது பயிற்சி வளர்ந்தோர் மறந்தார்
கன்னம் தொட்டிட பஞ்சினும் மெல்லிய
அனிச்சம் பூவென வுணர்ந்தேன் கேளும்
கண்ணே உன்முகம் நானும் முகர
அன்னை தந்த பால்மணம்
கண்ணே வீசக் கண்டேன் நானுமே

எழுதியவர் : பழனிராஜன் (17-Dec-20, 5:55 pm)
சேர்த்தது : Palani Rajan
Tanglish : kanne PAPPA
பார்வை : 56

மேலே