தேனா யினிக்குந் தெவிட்டாது - வஞ்சி விருத்தம்

வஞ்சி விருத்தம்
(மா மா புளிமாங்காய்)

தேனா யினிக்குந் தெவிட்டாது
மானாய்த் துள்ளும் மருளாது
தானா யிசைக்கத் தனியாக
மேனாள் வாழ்வும் எளிதாமே!

- வ.க.கன்னியப்பன்

வஞ்சி விருத்தம் (மா மா புளிமாங்காய்) என்ற சீர் ஒழுங்கில் அமைந்திருக்கிறது.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (23-May-21, 8:07 am)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 38

மேலே