பொக்கிசமாய் வளர்த்த பொண்ணு
பொக்கிசமாய் வளர்த்த பொண்ணு
புறமுதுகு காட்டி எங்கோ
புறப்பட்டுப் போனதேனோ !
காமம் என்னும் காதல் வலையில்
கண்டவள் பின் திரிந்த ஒருவன்
கதைகள் எதுவும் தெரியா பொண்ணு
கை பிடிக்க சென்றாளோ !
பெற்றவர் மனம் தனையே
காதலுக்கு தான் எதிரி என்று
நம்பவே வைத்துவிட்டு
கழுத்தையே நெரித்ததுபோல்
கரை ஒதிங்கிப் போனாளோ!
வந்தகடன் கொடுக்கவில்லை
விசா எதுவும் அவனுக்கில்லை
வேலையற்ற வீணகனாய்
வீதி எல்லாம் சுற்றிவிட்டு
காமம் என்னும் பசிதீர்க்க
ஆசை பல வார்த்தைகூறி
அழைத்தே சென்றானோ !
எத்தனையோ பெண்களை ஏமாற்றி
கடைசியில் ஏமாந்து
இருதலைக் கொள்ளி எறும்பாக
இப்பொண்ணின் நிலையாச்சு
உயிர் அற்ற உடம்போடு
தாய் தந்தை உடன் பிறப்பு
எண்ணியே பாராமல்
வாழ்வாளா இவ்வுலகில்
பணமற்ற பரதேசி
காமத்தின் பசி தீர
பாதியிலே விட்டுவிடும்
மீண்டும் வந்து தாய் வீட்டில்
வாழ நினைப்பாளா
பள்ளி நீ போவதாக
பாசமுடன் நீ கொஞ்சி
பாதியிலே காமுகன்
கரம் கோர்த்து
சென்றாயா வாழ்வதற்கு
மனம் ஒன்றுபட்ட காதல்
என்றால்
பணம் இன்றி உன்னால்
எவளவு காலம் தான்
வாழமுடியும்
வாழ்க்கைக்கு முதலிலே பணம் வேண்டும்
அதற்கு ஒரு வேலை வேண்டும்
வாழ்வதற்கு ஒரு வீடு வேண்டும்
அதன் பின்பு காதல் பண்ணு
சிறப்பாய் வாழ்வாய்.நீ.......
கவிதாசன்