படித்தவன் தமிழன்

படித்தவன் தமிழன் என்று
பறைசாற்றியது யாழ் மண்.
எங்கும் இல்லா நூல்களெல்லாம்
கொட்டிக்கிடந்தது யாழ் நூலகத்தில்
அறிவாளியாக இருக்கும் தமிழன்
இன்னுமா பேரறிவாளனாக வரவேண்டும் !

தீ என்னும் வஞ்சகத்தால் நூலகத்தை
பொடிசாம்பல் ஆக்கிவிட்டு
படித்தவன் எவரும் இல்லாதிருக்க
பள்ளிமாணவருக்கே !

நெஞ்சத்தில் வஞ்சமுடன்
நிறைவேற்றியது போதைவஸ்தை
ஆண்டுஆண்டாய் அடிமைப்பட்டுக்கிடந்த
ஒரு சில தமிழர் கூட்டம்
அதற்குமா விதிவிலக்கு !

எத்தனை துயர் வரினும் ஏங்காத தமிழரினம்
இதற்குமட்டும் அடிமையாகி ஏன் தான் அழிகிறது
சிங்களம் நினைத்தபடி சிதறியது தமிழரினம் !

போதைக்கு அடிமையாக்கி
வாள் கத்தி கோடரி கொடுத்து
பக்கபலமாய் தானிருந்து
தமிழனை தமிழனே கொல்லும்
வித்தையை கட்டவிழ்த்து விட்டான்
குள்ளநரி குசும்பல் கூட்டம் !

மற்றவர் துணையின்றி மகுடிகூட ஊதாது
வற்றிவிடும் குளம் என்று
வயிறாற உண்ண எண்ணி
வற்றாத நீர்தனிலே
பசிதீர்க்க ஏதும் இன்றி
வயிறெரிந்து செத்திடுமோ !

அது போல் ஏமாளிகள் உள்ளவரை
ஏய்ப்பவர்கள் ஏய்ப்பார்கள்
அதனை உடைத்தெறிந்து
சங்ககால தமிழன்போல்
வாழ்ந்தோமானால் மீண்டும்
தலை நிமிரும் தமிழரினம்..........

எழுதியவர் : கவிதாசன் (20-Apr-18, 3:52 am)
சேர்த்தது : kavithasan
பார்வை : 95

மேலே