முட்டாள்களும் உழைப்பாளிகளும்
மூடநம்பிக்கையில்
முடங்கிப்போன
முட்டாள்கள் எல்லாம்
தங்களின் முயலாமையை மூடிமறைக்க
எல்லாம் என் ராசி என்றார்கள்
உறுதிஉழைப்பில்
ஊறிப்போன
உழைப்பாளிகள் எல்லாம்
தங்களின் உயர்ச்சியை எடுத்துரைக்க
எல்லாம் என் உழைப்பு என்றார்கள்