இந்த அனாதையின் ஏக்கம்
கொலை குத்தம் பண்ணலையே!
ஒரு பாவமும் செய்யலையே!
பால் மணமாறா பிஞ்சுல,
நான் செஞ்ச பாவமென்ன???
பாலுக்கு ஏங்குறேன்;
பசிக்கு அழுகுறேன்;
கிடைச்ச சோத்த தின்னுகிட்டு,
கிடைச்ச இடத்துல தூங்குறேன்;
பஞ்சு மெத்தை இல்ல;
கொஞ்சி பேச ஆளில்ல;
கெஞ்சி கெஞ்சி கேட்டாலும்,
கொஞ்சம் கூட இரக்கமில்ல - அந்த கடவுளுக்கு!
என்னை சேர்த்த இல்லத்துல,
அனாதை இல்லத்துல,
மாதாமாதம் கொண்டாட்டம்;
பிறந்தநாள் கொண்டாட்டம்;
ஆனால் எனக்கு இல்லையே!
எனக்குதான் யாருமே இல்லையே!
இறுக்கமான கடவுள்கிட்ட,
இரக்கத்தோட வேண்டுறேன்;
உணவிட்ட அண்ணா அக்கா,
நீண்ட நாள் வாழணும்னு;
இருந்தாலும் ஒரு ஏக்கம்;
என் மனசு ஓரம்;
என் பிறந்தநாள் எப்போ???
அதை யாரு கொண்டாடுவா???