முகம் தெரியாத உன்மீது எனக்கு முதல் காதல் 555

என்னுயிரே...

கடற்கரையோரம் நீயும் நானும்
நடப்பதுபோல் தனிமையில் நடக்கிறேன்...

தொலைவில் திரும்பி
பார்கையில்...

முன்னே சென்ற காதல்
ஜோடிகளின் பாதச்சுவடுகள்...

என் சுவடுகளை மட்டும் தனியாக
கனவில் நடைபோடுகிறேனடி நான்...

பூங்காவவிற்கு
சேர்க்கிறேன் நான்...

மரக்கிளையில்கூட காதல்
பறவைகள் கீச் லீஈச் என்று...

இருக்கைகளில் காதல்
ஜோடிகள் சிரித்துக்கொண்டும்...

கோவத்துடனும்...

கண்கலங்கும் காதலியின் முகத்தையே
கையகளில் ஏந்தியபடி ஒருஜோடி...

இருக்கையில் நானும் அமர்ந்தேன்
தனிமையில் சிரித்தேன்...

ஏல்லோரும் ஏளனமாக
பார்த்தார்கள் எண்னை...

அவர்களுக்கு எப்படி தெரியும் நான்
உன்னுடன் பேசி சிரிப்பது...

எனக்கானவள் எங்கோ பிறந்திருப்பாள்
என்ற நம்பிக்கையில் தான்...

எனக்குள் உன்மீதான
முதல் காதல் துளிர்விட்டதடி...

முகம் தெரியாத உனக்காக
நான் காத்திருக்கிறேனடி காதலுடன்...

மலரும் பூக்களுக்கு மணம்வீச
யாரும் சொல்லி கொடுப்பதில்லை...

மலரும் என் வாழ்வில் புதுவசந்தமாக
நீ வரவேண்டுமடி கண்ணே...

காதலுடன்
உனக்காக நான்.....

எழுதியவர் : முதல்பூ பெ.மணி (31-Jan-17, 9:01 pm)
பார்வை : 763

மேலே