வாழ்த்து

இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் இலந்தை இராமசாமி ஐயா அவர்களே .


மரபின் மகுடமாய் மண்ணுலகில் வாழும்
உரமான வேந்தரை ஊன்று .

அகவையோ கூட அருந்தமிழ் கூடும்
முகப்பொலிவும் சான்றாகும் முன் .

முத்தான தாய்மொழிக்கு முத்திரைத் தந்தவராம்
சொத்தாம் உலகின் சுகம் .

இனிய பிறந்தநாள் இன்பங்கள் சேரும்
கனிபோல் சுவைக்கும் கனிந்து .

வளமும் நலமும் வரவேற்கும் நாளும்
உளமார வாழ்த்த உவப்பு .


என்றும் அன்புடன்
சரஸ்வதி பாஸ்கரன்

எழுதியவர் : சரஸ்வதி பாஸ்கரன் (21-Apr-21, 12:13 am)
சேர்த்தது : sarabass
Tanglish : vaazthu
பார்வை : 74

மேலே