மனிதன் போகும் போக்கு
மனிதன் போகும் போக்கு
=======================
ஈகை குணம் மறந்தோம்
இகழுதல் சேர்த்துக் கொண்டோம்
வாழை செயல் மறந்தோம்
வாழ்வெலாம் கஞ்சன் ஆனோம்
கண்முன்னே வறியர் கண்டும்
கண்மூடி நடித்து நிற்போம்
காசுபணம் கேட்போர் முன்னே
காதுகேளார் போல் நடப்போம்
அறச்செயல்கள் அறவே விட்டோம்
அகம்பாவம் கட்டிக் கொண்டோம்
புறமுதுகிட்டு ஓடும் செயலை
உதவி கேட்போரிடம் கடைபிடித்தோம்
மனிதநேயம் மறந்து போனோம்
மிருகம்போலே முழுதாய் ஆனோம்
நேர்மையாக இருக்கும் சிலரால்
மழையும் பெய்ய பிழைத்துக்கொண்டோம்
இம்மியளவும் இனியவை இல்லை
சிரிக்கக்கூட காசு கேட்போம்
நல்லது செய்யும் சிலரைக்கூட
கேலியாய் பார்க்க கற்றுக்கொண்டோம்
அழிவை நோக்கி போகும்செயலை
முழுவீச்சிலே ஏன் செய்கின்றோம்?
பழியை நம்மேல் போடும்முன்னே
விழித்துக் கொண்டால் மனிதனாவோம்..
அ.வேளாங்கண்ணி