திரும்ப வரும் நாள் பார்த்து

அலை அடித்துக் கொண்டிருக்கிறது
பயம் அலைந்து கொண்டிருக்கிறது
நிலை குலைந்து கொண்டிருக்கிறது
நிஜம் வருத்திக் கொண்டிருக்கிறது

உயிர் பறந்து கொண்டிருக்கிறது
உலகம் தவித்துக் கொண்டிருக்கிறது
மூச்சு விழித்துக் கொண்டிருக்கிறது
பேச்சு நடுங்கிக் கொண்டிருக்கிறது

அன்பு கலங்கிக் கொண்டிருக்கிறது
உறவு ஆடிக் கொண்டிருக்கிறது
ஆரோக்கியம் திரும்பவரும் நாள்பார்த்து
ஜனமே தவமிருந்து கொண்டிருக்கிறது

எழுதியவர் : அ.வேளாங்கண்ணி (2-Jun-20, 8:46 pm)
சேர்த்தது : அ வேளாங்கண்ணி
பார்வை : 142

மேலே