குகை ஒலி - காதலாரா

குகை ஒலி
~~~~~~~~

மகுடம் மாற்றும் மந்திர
ஒலியலை ஓடும் குகையை
கால் தடம் கடக்கும் கணத்தில்
பாதை நகரா மாயை..
உள்ளே ஒருத்தி உடல்
உறக்கம் துறந்த நடுக்கத்தில்
குகை விரிசல் எண்ணி
பகையின் விழிக்குள் சிக்கி
ஆயுள் எரிய கதறி பின்
நாணமிழந்து உலர்ந்தது..

துறவுச் சென்ற வனத்தை
இரவு வான் துரத்த
அயர்ந்துக் கிடந்த எனக்கு
காற்றில் வந்த கதறல்
கருவின் ஆழமடைக்க...
வெகுண்டெழுந்து விரைய
காட்டுப் பாதை மர்மம்
மாறா நிற ஓவியத்தில்
சுழன்றுக் கொண்டே நின்றது..

ஒலிக் கிழித்த குகை முன்
ஒளி உமிழும் கையோடு
ஆறு வினாடி அசையாத
எனக்கு ..
எந்த ஈர்ப்புமில்லையென
குகைக்குள் நுழைந்து
தேட தேட ...
அத்தனைக் கதறலோடு
விரிசலுக்குள் அமர்ந்து
விழிகள் விரிய
கட்டுக்கடங்கா கோவத்துடன்
கவிதை எழுதியவள்...

எதோ கிடைத்ததுப் போல்
என்னையேப் பார்த்தாள்...
எல்லாம் அடைந்தேனென
அவளையே எழுதி...
அத்தனை கதையையும்
வனத்தில் வைத்தேன்
அவளின் குகையென.

- காதலாரா..

எழுதியவர் : காதலாரா ( இராஜ்குமார் ) (26-Sep-16, 9:32 pm)
பார்வை : 235

மேலே