சாமி ஊரு - காதலாரா
சாமி ஊரு
~~~~~~~~~~
சனிக்கிப் புடிச்ச கைக்கு
எளநிய புடுங்குனா மருந்து...
வெந்துத் தொங்குற கொடலுக்கு
சாராய பாட்டிலே விருந்து...
சாராயத்துல ஊறாத சாதி
சாணு உடம்புல நாறுது..
சனியத்த கக்கித் துப்பிட்டு
படிக்க வைடா புள்ளைய...
சேத்தோட நாத்து சேந்துட்டா
ஊத்தே செத்தாலும் வாழும்..
பனிக் காத்துக்கு பயந்தா
பல்ல கடிச்சே சாகணும் ...
எரம சாணியை ஓரமாக்
கொட்டி வச்சாலும் ஒரம்...
எந்த சாமியைத் தேர்ல
ஏத்தி வச்சாலும் பொணம்....
எவன் புள்ளப் படிச்சாலும்
கல்லு கடையே வைச்சாலும்
ஒழுக்க மயிர பழகிட்டா
ஒலக உசுர விக்காது...
- காதலாரா