வாரிசு
சினிமா பாடலை தழுவி எழுதியிருக்கிறேன் - உணர்வு என்னுடையது
வாரிசுக்காக ஏங்கும் தாய் உள்ளத்திற்கு சமர்ப்பணம்
ஏன் படைத்தாயோ
இறைவா என்னை ஏன் படைத்தாயோ...!
வேண்டாம் என்று சிசு வை அழிக்க
நினைப்போர் பலர் இருக்க
வேண்டாம் என்று சிசு வை அழிக்க
நினைப்போர் பலர் இருக்க
இல்லை ஒரு பிள்ளை என்று
ஏங்கிட என்னை படைத்தாயோ...!
நான் பிறந்த காரணத்தை நானே அறியும் முன்னே
எனக்கு முன் நீயும் வந்து ஏன் பிறந்தாயோ ...!
பாசமுள்ள கணவனே
ஏன் படைத்தாயோ
இறைவா என்னை ஏன் படைத்தாயோ...!
கை கொடுக்க யாருமில்லை
உதவி செய்ய மனமுமில்லை
சொல்லி அழ ஆட்களில்லை
செலவு செய்ய பணமுமில்லை
கடமையென வாழ வைக்க
ஏன் படைத்தாயோ
இறைவா என்னை ஏன் படைத்தாயோ...!
தாய் தந்தை செய்த நன்மை
ஒரு நாள் பலிக்குமென
மனம் கொண்ட எண்ணம் எல்லாம்
ஒரு நாள் கூடிவர
குழந்தை வரம் தந்து என்னை
மகிழ வைப்பாய் இறைவா என
தாய் மனதால் காத்திருப்பேன்
நம்பிக்கை தெய்வமே
ஸ்ரீ ராமஜெயம் ஸ்ரீ ராமஜெயம் ஸ்ரீ ராமஜெயம் ...!!!