மனசாட்சி
அடுக்கனைப் பூனையும்
அடுத்தவன் ஞானமும்
தொடுப்பது ஒரு சாட்சி...
படைத்தவன்
படைப்பிலே
இருப்பதும் இறப்பதும்
நடிப்பவன்
இவன் சாட்சி...!
கொடுப்பதும்
அளிப்பதும்
கொடையென இருப்பதால்
மனமே நீ சாட்சி...
மகளிவள்
மகனவன்
மனதிலே இருப்பது
மண்ணிலே இருக்கும் வரை...!
மறைந்தபின்
மறைப்பதும்
மனதிலே நிலைப்பதும்
உன் செயல்
கொடுத்த வினை...!
உடுப்பினை உடைப்பதும்
கடுப்பினில் கிடப்பதும்
பாசத்தில்
விளைந்தவையே...!
மனிதா...
உன் காட்சி
மனமே மனசாட்சி
மனதிலே
நிறுத்திவிடு...!
கனிவாய்
உன் பேச்சு
கனலாய் இல்லாமல்
இனிதாய்
அமைத்து விடு
மனிதா...
மறவாதே
மனதை மறைக்காதே
புதிதாய் பிறந்து விடு.