ஒளி பிறக்கட்டும்
விடியலே!
விரைந்து வா.
உனது வெள்ளி
வீதியில்
தூசி விலகி
சுடர் பிறக்கட்டும்.
இந்த இதய
மண்ணிலே,
இளைய
தலைமுறையின்
உன்னத எழுச்சி
உதிக்கட்டும்.
உயரும் ஒரு கோடி
கரங்களிலே,
எழும் ஒளி
ஜோதியிலே,
இந்த உலகம்
உயர்ந்து,
உன்னதம் ஆகட்டும்.!