எஸ் ஹஸீனா பேகம் - சுயவிவரம்
(Profile)
வாசகர்
இயற்பெயர் | : எஸ் ஹஸீனா பேகம் |
இடம் | : செங்கோட்டை, தமிழ்நாடு. |
பிறந்த தேதி | : 07-Jun-1991 |
பாலினம் | : பெண் |
சேர்ந்த நாள் | : 25-Jul-2016 |
பார்த்தவர்கள் | : 212 |
புள்ளி | : 15 |
தன்னிடமுள்ள
ஒட்டுமொத்த வெப்பத்தையும்
இன்றைய பொழுதே
செலவிட்டு தீர்த்துவிடுவதைப்போல்
அக்னியை உமிழ்ந்துகொண்டிருந்தான்
சூரியன்.
குளிா்பிரதேசத்து பாதசாரியை போல
வெற்றுக்காலுடனும்
ஆடைகளற்ற உடலுடனும்
உச்சிநேர சூரியகதிர்களை
உடலில் ஏந்திக்கொண்டு
தன் இஸ்ட தெய்வத்தின் புகழை பாடி
ஒரு கரத்தினில் யாசகம் பெற்றுக்கொண்டும்
மற்றொரு கரத்தினை தலைக்குமேலுயா்த்தி
வாழமோடு வாழ்வாயென
அருளாசி வழங்கிக்கொண்ருடுமிருந்தாா்
அந்த ஒற்றைக்கண் சாமியார்.
- எஸ்.ஹஸீனா பேகம்.
நானென்பது
நானேதானன்றி
பிரிதொருவரின்
பிம்பமல்ல..
நிஜங்களை
அடமானம் வைத்து
பிம்பங்களாய் பிரகாசிப்பதிலும்
உடன்பாடில்லை.
இங்கு
நானென்பது
தனித்துவமான
நான் மட்டுமே..
பிறிதொருவரின்
கைப்பாவையல்ல
நானென்பது
நானேதானன்றி
பிரிதொருவரின்
பிம்பமல்ல..
நிஜங்களை
அடமானம் வைத்து
பிம்பங்களாய் பிரகாசிப்பதிலும்
உடன்பாடில்லை.
இங்கு
நானென்பது
தனித்துவமான
நான் மட்டுமே..
பிறிதொருவரின்
கைப்பாவையல்ல
கூவத்தில் குளித்தெழுந்தாலும்,
நிலவின் பிம்பம் மாசடைவதில்லை.
தன்னிடமுள்ள
ஒட்டுமொத்த வெப்பத்தையும்
இன்றைய பொழுதே
செலவிட்டு தீர்த்துவிடுவதைப்போல்
அக்னியை உமிழ்ந்துகொண்டிருந்தான்
சூரியன்.
குளிா்பிரதேசத்து பாதசாரியை போல
வெற்றுக்காலுடனும்
ஆடைகளற்ற உடலுடனும்
உச்சிநேர சூரியகதிர்களை
உடலில் ஏந்திக்கொண்டு
தன் இஸ்ட தெய்வத்தின் புகழை பாடி
ஒரு கரத்தினில் யாசகம் பெற்றுக்கொண்டும்
மற்றொரு கரத்தினை தலைக்குமேலுயா்த்தி
வாழமோடு வாழ்வாயென
அருளாசி வழங்கிக்கொண்ருடுமிருந்தாா்
அந்த ஒற்றைக்கண் சாமியார்.
- எஸ்.ஹஸீனா பேகம்.
கணவனிடம் மனைவி எதிர்பார்ப்பது என்ன?
நான் உன்னை வெறுக்கிறேன்.
நான் உன்னை முழுவதுமாக வெறுக்கிறேன்.
புரிகின்றதா
உன்னை நான் வெறுக்க மட்டுமே செய்கிறேன்.
உன்னை ,
உன் சுபாவங்களை,
உன் ரசனைகளை,
உன் இயல்புகளை
உந்தன் விருப்புகளை,
மொத்ததில் உன்னுடையதான
நியாபகங்களை மீக்கொணர்துதரும்
அத்துனை அடையாளங்களையும்
வெறுத்து தொலைக்கிறேன்,
அல்லது தொலைத்திட முயற்சிக்கிறேன்.
மீண்டுமொருமுறை நினைவில்கொள்
உன்னை நான் வெறுக்கிறேன்.
இதில் பிரியங்கலந்த நேசமென்பது
துளியளவேனும் இருந்திடவில்லை யென்பதை அறிவாயா.
(20.08.2017 திண்ணையில் வெளியானது)
சின்னஞசிறு
பாதமணிகளில்
ஒலிப்பெதென்ன
பிள்ளைத்தமிழின்
புதியதொரு அத்தியாயமோ?
சின்னஞசிறு
பாதமணிகளில்
ஒலிப்பெதென்ன
பிள்ளைத்தமிழின்
புதியதொரு அத்தியாயமோ?
....கவிதையாகி வா காதலிக்க....
விழி வழியாய் வாக்குமூலம்
தந்தவளே கவி மொழியில்
உன் காதலதைச் சொல்வது
எப்போதடி...!
என் இதயக் காகிதத்தில்
ஒரு வரிக் கவிதை நீயும்
எழுதிட வருவாயா..
ஓயாமல் அலை பாயும்
மனதிற்கு ஒத்தடங்கள்
கொடுத்திட வியர்வைத்
துளிகள் சிந்தாத
செவ்விதழ்களைத்
தான் தருவாயா...!
வலிகளுக்கு நிவாரணம்
தேடி அலைகிறேனடி
தலை சாய்த்து நான் தூங்க
காதல் தலையணை நீ
கொண்டு வருவாயா...!
என் கிறுக்கல்களுக்கு
விடுமுறையளித்துக்
காத்திருக்கிறேனடி
எனை கவிதையாக்கி
காதலிக்க நீ வருவாய்
எனும் நம்பிக்கையில்...!
-உதயசகி-
யாழ்ப்பாணம்
..........நரகத்தின் வாசலில் சுகபோகங்கள்.........
கடித்துத் துப்பிய பழத்தின் மீதியில்
கட்டுக்கட்டாய் பணத்தை எண்ணும்
இரத்தம் உறிஞ்சிக் குடிக்கும்
ஒட்டுண்ணிகளின் எச்சிலோடு ஒட்டிக்கொள்கிறது ககனத்தின் வாசம்...!
பத்துக் கிளையிலும் பவளங்கள் பூத்தும்
பட்டினி கிடக்கும் பறவைகளிடம் தட்டிப்பறித்து உரம் கேட்கும் விருட்சத்தின் வேர்களுக்கு கிடைக்கும் இறுதிக் கூலியில்
மண்ணுக்குள் கேட்கிறது மடிப்பிச்சையின் ஓலம்...!
காற்றோடு போட்டி போட்டு அளவுக்கதிகமாய் ஆட்டங்காட்டும் பட்டங்கள் நூலறுந்து தத்தளிக்கையில் காளகூடத்தின் கண்ணாடி காதோடு ரகசியம் பேசிச் செல்கிறது ஆடிய ஆட்டங்களின் எண்ணிக்கையை அகரவரிசையில்.