ஒற்றைக்கண் சாமயார்
தன்னிடமுள்ள
ஒட்டுமொத்த வெப்பத்தையும்
இன்றைய பொழுதே
செலவிட்டு தீர்த்துவிடுவதைப்போல்
அக்னியை உமிழ்ந்துகொண்டிருந்தான்
சூரியன்.
குளிா்பிரதேசத்து பாதசாரியை போல
வெற்றுக்காலுடனும்
ஆடைகளற்ற உடலுடனும்
உச்சிநேர சூரியகதிர்களை
உடலில் ஏந்திக்கொண்டு
தன் இஸ்ட தெய்வத்தின் புகழை பாடி
ஒரு கரத்தினில் யாசகம் பெற்றுக்கொண்டும்
மற்றொரு கரத்தினை தலைக்குமேலுயா்த்தி
வாழமோடு வாழ்வாயென
அருளாசி வழங்கிக்கொண்ருடுமிருந்தாா்
அந்த ஒற்றைக்கண் சாமியார்.
- எஸ்.ஹஸீனா பேகம்.