மறுபிறப்பு

கொக்கரித்துக் கொள்கிறானோ!
மறுபிறப்பில் மாறுகொள்ளும் மானிடனாய்....
சிந்தனையில் மாறுகொண்டானோ! ஏளன எல்லையில் தோல்வியுற்றவனாய்....
மனைவியின் மடியைவிட்டு மகவு ஒன்று கதறிக்கொண்டதோ! அறைகள் முழுதும் பாசக் குரல் கேட்டவனாய்....
கண்களில் நீர் தழும்ப ஆனந்தக் களிப்பில் அள்ளிக்கொண்டானோ!
அன்னையின் அன்பு மீண்டும் கிடைத்துவிட்டதென்று....
பெருமகிழ்ச்சியில் திளைத்துவிட்டானோ!
பித்தனாய் பிதற்றுகின்றான் பிள்ளை வந்து பிறக்கையிலே....!!

வேல் முனியசாமி...

எழுதியவர் : வேல் முனியசாமி (8-Nov-19, 7:21 pm)
Tanglish : marupirappu
பார்வை : 465

மேலே